தேடல்கள்...
உன்னைப்பற்றிய
என் தேடல்கள்
தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது..
உன்னைப்பற்றிய
என் தவிப்புகள்
தொடங்கி கொண்டேதானிருக்கிறது..
எப்போதோ
நீ என் வீட்டு ஜன்னலோரம் நின்று
வீசிப்போன பார்வைகள்
ஈட்டியாய் இருதயத்தை
இன்னும் இம்சித்துக்கொண்டேதானிருக்கிறது..
பஸ் நிறுத்தத்தில் தொடங்கிய
நம் பார்வைகளின் ஸ்பரிசம்..
கனவுகளால் கைது செய்யப்பட்டு..
தூக்கம் தொலைத்து
துவண்டு கிடக்கிறது...
இழந்த இதயத்தை
உன்னிடம் நான்
திருப்பிக் கேட்க வில்லை..
விளைந்த காதலை தான்
அன்பின் கரம் கொண்டு
அறுவடை செய்யச்சொல்கிறேன்..!!
- அபிரேகா அலாவுதீன்([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.