For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போய் வா தோழி

By Staff
Google Oneindia Tamil News

உன் முகவரி இந்த
உப்பு காற்றில்
கரைந்துகொண்டிருக்கிறது
அலையலையாய் வந்துபோகும்
உன் நினைவுகளை
கடலலைகள் இழுத்துசெல்ல
கண்ணீருடன் பார்த்திருக்கிறேன்
உனது தடம் இதோ
நடுக்கடலில்.................................

நிர்ப்பந்தத்தால் பிரிவதாய் நீயும்
உன் சொல் மதிக்கும்
உத்தம செயல் புரிவதாய் நானும்
நம் நட்பின் கல்லறைமேல் நின்று
உரக்க கூவிக்கொண்டிருக்கிறோம்!

நட்பு கொலை செய்யப்பட்டதா?
நட்பு விபத்துக்குள்ளானதா?
இல்லை இல்லை
அது மனசாட்சி
துறந்த மனங்களில் வாழ்ந்ததிற்காய்
தற்கொலை செய்திருக்கவேண்டும்.

இனி
இரவில் நாம்
உரையாடும் நேரத்தில்
தொலைபேசி ஒளித்து
தலையணை நனைத்திருப்போம்
அறிவுறுத்த, ஆறுதல் சொல்ல, அரவணைக்க
அருகில் நீயிருப்பதாய்
சூன்யத்தில் நானுன்னை
விளிக்கவும் கூடும்!

எதுவெனினும் இன்றே
இறுதி நாளென்பதால்
உன் அழுகை கலந்த சம்மதம்
கேட்க தைரியமின்றி
என்னிலிருந்து உன்வரை நீண்டிருக்கும்
மெளனத்தால் சொல்கிறேன்
"போய் வா என்
பிரிய தோழி!"

- பாஷா([email protected])

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X