For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முடிவற்ற... - நெப்போலியன்

By Staff
Google Oneindia Tamil News

முடிவற்ற பயணத்தின்
நீண்ட வெளிகளில்
விரிந்து கிடக்கும்
காலம்.

வசந்தகால
இலைகளின்
இலையுதிர்த்
தழுவல்களால்
பூப்படையும்
நிலம்.

கொக்குகள்
மீன்களுக்கு
முத்தம் கொடுக்கும்
கனவுகளுடன்
தோல் சுருங்கிய
வெடிப்புகளாய்
ஏரி.

வெப்ப உமிழ்களின்
குதப்பலால்
எரிந்து போன
எறும்புகள்.

நேற்றின்
நாளையின்
இன்றின்
உயிர்ப்பைக்
கற்றுத்தரும்
பித்தனைத்
தேடியலையும்
யாத்திரையின்
முற்று
புள்ளியாகும்வரை...

காலம்
விரிந்து கிடக்கும்
நீண்ட வெளிகளில்
முடிவற்ற பயணம்!

- நெப்போலியன்([email protected])

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X