For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓடாத கடிகாரங்கள்

By Staff
Google Oneindia Tamil News

நின்றுபோன
கடிகாரங்களின்
தெளிவிக்கப்படாத மூர்ச்சை
தெரிவிக்கிறது பல விடயங்களை

சாவி முடுக்கி
பராமரித்த தாத்தா
பரமனடி சேர்ந்ததை

ஒரே பையன்
அமெரிக்கா போனபின்
உயர ஏறி சாவி கொடுக்க
ஆற்றலற்றுப் போன
பெற்றோரின் தனிமையை

கல்யாணப்பரிசாக வந்து
கடிகாரத்தின்
பேட்டரி மாற்ற
பணம் பற்றாத
மாத இறுதி எதார்த்தங்களை

மணிக்கொரு முறை அலறி
குழந்தையின் தூக்கம் கெடுப்பதை தவிர்க்க
வலுக்கட்டாயமாய் நிறுத்தப்பட்டிருக்கும்
கடிகாரங்கள்
சில வீடுகளில்.

ஓடும் கடிகாரங்கள்
நேரத்தை உணர்த்த
ஓடாத கடிகாரங்கள்
மெளனமாய் உணர்த்துவதோ
ஒரு குடும்பத்தின்
நிகழ்வுகளை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X