For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவிஞர் சுகுமாரனின் பாழ்நிலம் கவிதைத் தொகுப்பு அறிமுகம்- மாலதி சதாரா

By Staff
Google Oneindia Tamil News

இலக்கிய உலகுக்கு இணைய தளங்களும், மடலாற் குழுமங்களும் ஆற்றும் பங்கு மகத்தானது. குழுமங்களைப்பற்றி குறிப்பிடும்போது, ராயர் காபி கிளப்பை முன்னிருத்தாமல் செல்ல முடியாது. செறிவான விவாதங்கள்,ஆழமான கட்டுரைகள், நல்ல கவிதைகள் என்று ஒரு சிறுபத்திரிக்கைக்கு உண்டான அனைத்து அம்சங்களுடன்ராயர் காபி கிளப் விளங்குவது பாராட்டுக்குரியது.

இந்தக் குழுமத்தில் வெளியான ஆக்கங்கள் இனி அவ்வப்போது நமது இலக்கிய பக்கத்தை அலங்கரிக்கும்.

([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் குழுமத்தில்அண்மையில் வெளியான கருத்து விவாதங்களை உங்களது மின்னஞ்சல் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

பாழ்நிலம் கவிதைத் தொகுப்புக்கு மாலதி சதாரா எழுதிய மதிப்புரையை முதலில் தருகிறோம். இதை எழுத்தாக்கம்செய்து குழுமத்துக்கு அனுப்பியவர் முருகன் ராமசாமி ([email protected])

கவிஞர் சுகுமாரனின் பாழ்நிலம் கவிதைத் தொகுப்பு அறிமுகம்

- மாலதி சதாரா

பாழ்நிலம் என்ற தலைப்பில் புதிய கவிதைத் தொகுப்பு கொண்டுவந்திருக்கிறார் சுகுமாரன். அவர் பெயரோடு இயைந்து போனகவிதையுலகுக்குப் பெருமை சேர்க்கிற தொகுப்பு என்றேசொல்லவேண்டும். இவ்வளவு வருடங்களாக எழுதிவந்தும் தந்திரங்கள்கைவராத எளிய மனிதர் சுகுமாரன். இருபத்திரண்டு கவிதைகள்படங்களோடு கூடி வந்திருக்கின்றன. பையாம்பலம் கடல் முகப்புஅட்டையிலும், கவிதைக் கருத்திலும் மிக அழகிய பாதிப்பைத்திணித்துப் போகிறது.

ஒரு குற்ற வேளையில் கவிதையைப் பிரவாகித்த முதல் பதிவுதொடக்கமாகப் பல கவிதைகள் நெருக்கத்தை மனசுக்குள்நீடிப்பதாகின்றன. எளிய ஒற்றைக் கருத்தை எடுத்து உள் அந்தரங்கப்பொடிதூவி லேசாகச் சில வரிகளில் புரட்டி வீசிப் போகும், அவருடையபழைய கணித மரபுகளை மீறி வரவில்லை இந்தத் தொகுப்பும். எனினும்புதிய உலோகங்கள் சேர்ந்திருக்கின்றன. ஸ்தன தாயினி, அறைவனம்,எட்டுக்காலியும் நானும், இருந்தவர்களும் இருப்பவர்களும் - போதுமே !

வென்றிலன் என்ற போதும் கவிதை உத்தமமாகச்

சொல்லப்பட்டிருக்கிறது.

சில வரிகளைச் சொல்லியாக வேண்டிய குறுகுறுப்பு வருகிறது.

----------

Desertகண்டடைந்த பின்னும்
கண்டு பிடிக்கப் படாத நிலம் உன் தேகம்
ஏனெனில்
உடலும் நிலமும் மனதால் ஆனது.

----------.................................

உதாசீனப் புருவ நெருப்பின்
பேரோசை போதும் - என்
காலம் திகைத்து நிற்க.
-------------...............................

ஆண்டவன் ஆண்டவனாகும் முன்பு
அருளாளன். அருளாளனாகும் முன்பு
எந்த மதத்தில் இருந்தது உறுப்பு?
எந்த மதத்தில் கிடந்தது உடம்பு?

------------------

..................................

எனினும் எட்டுக்காலி
என்னை விடப் பாக்கியசாலி.
சொந்த வலையில்
ஒரு போதும்
சிக்குவதில்லை - அது.

--------

முன்னுரைகள் சிலரால் தான் ஒளிப்படுகின்றன. சுகுமாரனின்முன்னுரைக்காகவே தொகுப்பைப் படிக்க வேண்டும்.(சுகுமரனின் பாழ்நிலம் கவிதைத் தொகுப்பு :- அன்னம் வெளியீடு,)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X