For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவிதை

By Staff
Google Oneindia Tamil News

முதல்வர் கருணாநிதி தனது இளமைக் காலத்தை நினைத்தும், முதுமைக் காலத்தின் நிலையையும் விவரித்து உருக்கமான கவிதை ஒன்றைப் படைத்துள்ளார்.

கருணாநிதியின் அந்த உருக்கமான கவிதை இதோ ...

என்றைக்கும் இன்று போல;
இயல்பான மனமுடனே இருப்பன்தான் கருணாநிதி

எண்பத்தி நான்கு என அகவை ஆனாலும்;
பதிநான்கு வயதுப் பள்ளி மாணவனாக

Kalanidhi Maran, Karunainidhi and Dayanidhi Maran
இன்னும் படிக்கவே ஆசை எழுகிறது
இரு வண்ணக்கொடி பிடிக்கவே கரம் துடிக்கிறது

அஞ்சுகம் அன்னை மடியில் கொஞ்சி மகிழவும்;
அப்பா முத்துவேலர் கரம் பிடித்து ஏர் தொழுது உழுதிடவும்

அய்யகோ நெஞ்சம் கெஞ்சுகிறதே - வரம்கேட்டு அந்த வாய்ப்புக்கு!
அக்காள் இருவர் அரவணைப்பில் சுகம் கண்ட உள்ளம்; இனி

எக்காலம் எனைத் தூக்கி மகிழ்வர் எனும் ஏக்கமே குடி கொள்ளும்!
முக்காலும் இனி வரப் போவதில்லை உயிர் மூச்சாக எனைக் கொண்ட சகோதரிகள்!

மாறன், அமிர்தம், செல்வம் மருமகப் பிள்ளைகள் மான் குட்டிகளாய்;

மார் மீதும் தோள் மீதும் பாய்ந்து விளையாடிய காட்சியெல்லாம்

ஓய்ந்து போயினவே என் இளமையோடு அவை ஒழிந்தே போயினவே;
தேய்ந்த என் முதுமைத் தோள்களிலே தாங்கும் வலிமை இல்லாததினால்!

துரோகத்தால் எனைத் துளைத்துச் சென்ற தோழர்கள் சிலரும்;
தோள்மீது கை போட்டுத் துணைக்கு வந்து விட்டோம் என்பதும் கனவுதானே!

பலிக்காத கனவுகளால் மனம் வலிக்காது
ஜொலிக்காத கூழாங்கற்கள் குப்பைக்கே போகும்

பட்டைத் தீட்டிப் பார்த்தாலும் பலனில்லை;
குட்டைக் குறள் கூறுகின்ற

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர் எனும்

நெட்டை நீதி போற்றி
நிமிர்ந்து நின்றிடுவேன்!

நான் பிறந்த காரணத்தை
நானிலத்தில் செயல்படுத்த

நாயினும் கீழாய் உழைத்திடுவேன்
தாயினும் சிறந்த தமிழகம் காத்திடுவேன்!

ஓராயிரம், ஈராயிரம், லட்சம், கோடியென
உடன் பிறப்புகள் இருக்கின்றீர்;

தீராத வேதனையும் தீர்க்கின்ற எந்தன்
திராவிடக் காளையர் கூட்டம்;

திக்கெட்டும் இருள் சூழ்ந்தாலும், நிலைத்து
நிற்கட்டும் கோட்டை மீது நமது கொடியென்று

பறக்க விடும் - பகையைப் பஞ்சாய்ப்
பறக்க விடும்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X