For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ஏ)மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News


-சோமு சுந்தரம்

எத்தனையோ மாற்றங்கள்
எத்தனை எத்தனையோ மாற்றங்கள்

விரும்பும் உடை
விரும்பிய கல்வி
விருப்பத்துக்குரிய வேலை
விருப்பமான மனைவி- என்று

ஒவ்வொன்றும்
தேடித்திரிந்து
பெறுவதற்குள்

எத்தனையோ மாற்றங்கள்
எத்தனை எத்தனையோ மாற்றங்கள்

ஒன்றை இழந்து
இன்னொன்றை பெற்று
அந்த இன்னொன்றையும் இழந்து
எதையே பெறுகிறோம்- பிறகு
எதற்காகவோ அதையும் இழக்கிறோம்

இறுதியில்
இழப்பதற்கும் பெறுவதற்கும்
எதுவும் இல்லாமல்...

தொலைந்து போகிறோம்

-சோமு சுந்தரம் ([email protected])

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X