For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸங்க்ஷிப்த ராமாயணம் (ராமாயண கதைச்சுருக்கம்)

By Chakra
Google Oneindia Tamil News

- பத்மா ஸ்ரீராமன்

தசரத மகாராஜா செய்த யாகத்தின் பலனாய்
அன்னை கோசலையின் மணிவயிற்றில் உதித்து
ரகுகுலத்திற்கு பெருமை அளித்து
வில்வித்தை, வாள்வித்தையில் தேர்ந்து
விஸ்வாமித்திரரின் வேள்வியை காத்து நின்று
அகலிகையின் சாபத்தை போக்கி
ஜனக நகர் சென்று
சிவதனுஷை வளைத்தொடித்து
நங்கை சீதையின் கை பற்றி
சிற்றன்னை கைகேயியின் ஆணையால் மரவுரி மான் தோல் தரித்து
மனையாள் சீதை, சகோதரன் இலக்குவன் பின் தொடர கானகம் சென்று
குகனின் அன்பான உதவியால் கங்கையைக் கடந்து
சித்திரகூடம் தனில் தங்கி
பரதனுக்கு பாதுகையை அளித்து அரசாள செய்து
அகஸ்தியரை தரிசித்து பஞ்சவடி சென்று
அங்கு வந்த அரக்கி சூர்பனகையின் மூக்கை அறுக்க வைத்து
மாயமானான மாரீசனைக் கொன்று
சீதையை பிரிந்து
மனம் தளர்ந்து
ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து
சபரியை ஆசீர்வதித்து
அனுமனை சந்தித்து
சுக்ரீவனுடன் நட்பு கொண்டு
வாலியை வதைத்து
வாயுபுத்திரனுக்கு அனுக்ரஹ பலம் அளித்து
விளையாட்டாக சாகரத்தை தாண்டவைத்து
இலங்கையினுள் புகுந்து
அசோகவனத்தில் அமர்ந்திருந்த சீதையிடம் கனையாழியை
கொடுக்கச் செய்து
இராவணனை சந்தித்து
இலங்கைக்கு தீயிட்டு வந்த மாருதியிடமிருந்து சீதை அனுப்பிய
சூடாமணியை பெற்றுக் கொண்டு
அலைகடலில் அணை கட்டி
அனைவருடன் இலங்கை சென்று
இராவணாதியரை வென்று விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்
செய்வித்து
அன்பு மனையாள் சீதைக்கு அக்னி தேவனின் ஆசியைப் பெற்று
கொடுத்து
ஆருயிர் சீதை, ஆசை இலக்குவன், தாசன் அனுமன் மற்றவர்களும்
பின் தொடர நந்திகிராமம் வந்தடைந்து
பரதனை கண்டு அணைத்து
அனைவருடன் அயோத்தி திரும்பி
ஆவலுடன் காத்திருக்கும் ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கி
அன்பு தாயார்களின் பொற்பாதங்களை பற்றி வணங்கி ஆசி பெற்று
அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து மணிமகுடம்
ஏற்றுக் கொண்ட
மஹானுபாவன் ஸ்ரீராமபிரானை
நான் தாளும் தடக்கையும் கூப்பி வணங்கி பூஜிக்கிறேன்.

English summary
Padma Sriraman from Pittsburgh, Pennsylvania, USA has given the gist of the great epic Ramayana in poetic style.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X