For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'வாஞ்சை மிகு தாயே எழுந்து வாருங்கள்'... ஜெயலலிதாவுக்காக உள்ளம் உருக்கும் ஒரு கவிதை!

By Shankar
Google Oneindia Tamil News

பூ போன்ற மகள்
அப்பல்லோவில் படுத்துக் கிடக்கிறாளே என
புலம்புதற்கு தாய் இல்லை....

நோய் தீர்ந்து என் மகள்
புன்னகை சிந்தி வருவாளென
பார்த்திருக்கத் தந்தை இல்லை...

A heart touching poem on CM Jayalalithaa

தெய்வங்களைக் கேட்டே
என் சகோதரி நலம் மீட்பேன்
என்று பூசை செய்ய
சகோதரன் இல்லை..

மாற்றுடை வேண்டுமோ என
உடுப்புகள் தேடி எடுத்துப் போக
உடன் பிறந்த தங்கை இல்லை..

பெற்றவள் நலம் மீட்ட பின்பே
மற்ற வேலை என்று
மார் தட்டிச் சொல்வதற்கு மகன் இல்லை..

மருந்து மாத்திரை தேடி
எடுத்து மணி தவறாமல்
கொடுத்திட
மகள் இல்லை..

ஆனாலும் ஈரெட்டு நாட்களாய்
தாய் முகம் காணாமல்
எத்தனை இதயங்கள் இங்கே
கண்ணீரில் குளிக்கிறதே..

கட்டுக்கடங்கா கூட்டம்...
வாழ வைத்த தாய்
வாடிக் கிடக்கலாமோ என
செந்தனலில் இட்ட புழுவாய்
தவிக்கிறது தமிழ்நாடு..

உள்ளங்கைக்குள் மாணவர்
உலகைக் காண மடிக்கணினி
தந்த மாதரசி நலம் பெறவே
வேண்டி நிற்கிறது மாணவச் சமூகம்..

காவிரியை மீட்டு வந்து
முல்லைப் பெரியாரை
காத்துத் தந்து கழனி வாழ்
உழவினத்தின் கண்ணீர் துடைத்த
எங்கள் கனிவு மனத் தாயுன் நிலை
பொறுக்காமல் உயிர் உருகும்
வேதனையில் உழவர் கூட்டம்

இன அழிப்பு இலங்கைக்குக்
குலைநடுக்கம் கொடுத்த
உலகத் தமிழினத்தின்
ஒப்பில்லாத் தலைவியை
ஒரு நோய் வந்து சாய்ப்பதுவா என
ஊணுறக்கம் கொள்ளலையே..

கருத்தரித்த பெண்ணுக்கு
ஒன்றிரண்டு பிள்ளை
கருணை தரித்த
எங்கள் அம்மா உமக்கோ
பத்து கோடி பாசப் பிள்ளைகள்..

வாஞ்சை மிகு தாய்
எழுந்து வரும் நாளை எதிர்பார்த்து வாடுதே தமிழகம் .....

அம்மா... உங்கள் வருகையை எதிர்பார்த்திருக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாய்!

-எழுதியவர் யாரோ... ஆனால் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது இந்தக் கவிதை.

English summary
A heart touching poem written by some unknown person on CM Jayalalithaa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X