For Daily Alerts
Just In
தனிமைப்பட்டாவது தாயகம் காப்போம்!
சென்னை: கொரோனாவைரஸ் பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிப்புகள் அந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து வருவதால் மக்கள் அஞ்சுவது இயற்கையே.

கொரோனாவைரஸ் குறித்து நமது வாசகர் சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்தவரான ஜி. செளந்தரராஜு நமக்கு அனுப்பி வைத்துள்ள ஒரு கவிதை.
கொரோனா...
உலகை உலுக்கும் உருவமே
உயிர்குடிக்கும் அருவமே,
காற்றில் கலந்த கசடே
கண்ணில் தெரியா கிருமியே,
ஊர் சுற்றும் தூசியே
உன்னைத் தடுக்க இல்லையாம் ஊசியே,
முகமூடிகளால் மறைத்தோம்
எங்கள் முகங்களை
மனங்களை அல்ல.
கைகளை சுத்தமாக்கினோம்
தெருக்களை நிசப்தமாக்கினோம்.
நாங்கள் மருந்துகளை அல்ல,
உறக்கம் துறந்து உழைக்கும் மருத்துவர்களையே நம்பினோம்.
இது இந்தியா
வேறு பட்டாலும் ஒன்றுபடுவோம்!
தனிமை பட்டாவது தாயகம் காப்போம்!
- கோ சௌந்தி