For Daily Alerts
Just In
மண் மகிழ்ந்து தரும் வாசம் அழகு!
மழலை சிந்தும் கண்ணீர் முன்
மழலையின் வெம்பல் அழகு
மழை துளிகள் மேகம் விட்டு பிரியும் முன்
மேக மௌனத்தின் கருப்பு அழகு
வானம் விட்டு வரும் மழைகளுக்கு
வானம் விடும் வேடிக்கை அழகு

மழை நெருங்கும் காற்றின் நெகிழ்ச்சி
மழையோடு ஆடும் நடனம் அழகு
மரத்தின் இலையில் விழும் மழை துளியின் சிலிர்ப்பில்
காற்றின் இசையில் மரங்களின் அசைவு அழகு
மழை மண்ணில் விழும் முன்
மண்ணும் மணமகிழ்ந்து தரும் வாசம் அழகு
வருணனின் வருகை அறிந்து
இயற்கையின் வரவேற்புகள் அழகு
மண் தொட்டு விழும் துளிகள் தரும் சுவாசம்
மண்ணுக்கு மட்டுமல்ல
மனிதன் உள்ளிட்ட உயிர்களுக்குமே!
- கலை