• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பற்றிப்படர்ந்திட தடியுமில்லை.. வேரினை ஊன்றிட மண்ணுமில்லை #Mullivaikkal

|

சென்னை: முள்ளிவாய்க்கால் 10 ஆண்டு நினைவு தினம்.. உலகெங்கும் உள்ள தமிழர்கள் உணர்ச்சிப் பெருக்கில் உள்ளனர்.

தமிழர் வாழ்வில் மறக்க முடியாத நாளான மே 18ம் தேதியையொட்டி நமது வாசகர் திவாகர் நவரத்னம் எழுதியுள்ள ஒரு உணர்ச்சிக் கவிதை...

A poem to remember the day of may 18

முள்ளிவாய்க்கால்

கந்தகத்தை சுவாசித்தோம்

குருதியாற்றில் குளித்தோம்

தலைவன் பின்னால்

தமிழனெல்லாம் தவமிருந்த பூமியது

அங்குல நிலமும் ஒவ்வொரு கதை பேசும்

கஞ்சிக்கு நின்றவர் கணைக்கு விழுந்த

கதைசொல்லும் பாதுகாப்புக்காய்

பதுங்ககழியில் பதுங்கியவருக்கு

பதுங்ககழியே பாடையான கதை சொல்லும்

உயிரற்றமகவை விட்டுவிட மனமின்றி

தோளிற்சுமந்த தந்தையர் கதை பேசும்

வீட்டிற்கொருவரை களத்துக்கனுப்பி

கண்ணீருடன் காத்திருந்த

அன்னையர் துணையவள் கதை பேசும்

பொத்திவளர்த்த குஞ்சுகளை கொத்திப்போகும் பருந்தினை

எதிர்த்திட முடியாமல் தவித்திட்ட

பெற்றவர் கதை பேசும்

முன்னே நடப்பவன் இமைக்கு நொடிக்குள்

மடிந்திடுவான் அள்ளி அணைக்க முடியாமல்

உயிருக்காய் ஓடியவர் கதை சொல்லும்

புலரும்பொழுதெல்லாம் மரணத்தில்

புலர்ந்த கதை பேசும்.

குருதியாற்றில் குளித்தமண்

எத்தனை கதை பேசும் மடை

திறந்த வெள்ளமாய் கொட்டித்

தீர்த்திடும் வாயிருந்தால்

ஈழக்கனவை கடைசிவரை சுமந்தே

இங்கேயல்லவா புதைத்தோம்

மூபத்தாண்டு கனவல்லவா எம்

கனவு கனவாகவே இன்னும்...

பத்தாண்டில் நாங்களிங்கே பரிதாபங்களாய்

எடுப்பார் கைப்பிள்ளையாய்

அரசியல் முதல் அந்தரங்கம் வரை

முள்ளிவாய்க்கால் பேசுபொருள்

முடிந்துவிடவில்லை எம் அவலம்

முடிவிலியாய் தொடர்கிறது

தேசம் துறந்து பரதேசம் பறந்துவந்தாலும்

கண்மூடும் வேளையிலும் கனவாய்

வந்து கொல்லுது

அழகான வாழ்விருந்தது அழிவினில்

மீண்டிட துணிவிருந்தது மலையாய்

நம்பியிருந்த தலைவன் இல்லையென்றானதும் எல்லாம்

தப்புத்தாளங்களாய் கண்முன்னே

வந்தவன் போனவன் நிண்டவனெல்லாம்

புதுப்புது பெயரில் புலிவேடமிட்டு

நித்தமொருகூத்து இப்போ அரங்கேற்றம்

ஆழியில்லாக்கப்பலாய் அல்லாடும்

எம்மில் சவாரிக்கானகாத்திருப்புக்கள்....

வேள்விக்காய் நாமிறைத்தது

மூன்று தலைமுறைக்கான

முப்பதுவருடவாழ்வுமட்டுமா

அடுத்த தலைமுறைக்கான நிமிர்வையும்தான்

தொட்டுவிடும் தூரத்தில் இப்போ தொடுவானமாக ஈழம்மட்டுமா

செத்தவர் தொலைந்தவர்க்கான நீதியும்

பற்றிப்படர்ந்திட தடியுமில்லை

வேரினை ஊன்றிட மண்ணுமில்லை

நாதியற்ற மக்கட்கூட்டமாயெம் வாழ்வு

மாவிலாற்றுப்பயணம் நந்திக்கடலுடன்

விடையேறியது

பரிநிர்வாணமானது புத்தர்மட்டுமா

நாங்களும்தானே

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
May 18 is an unforgettable day in every Tamil's life and here is a poem penned by our reader Diwakar Navartnam on this day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more