For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹாசினியே ஒளிர்ப் பூந்தளிரே..!

சிறுமி ஹாசினி குறித்து ஒன் இந்தியா தமிழ் தளத்தின் வாசகர் ஒருவர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தஷ்வந்த் என்ற கயவனால் கசக்கி எறியப்பட்ட போரூர் குழந்தை ஹாசினி நினைவை சொல்லும் கவிதை ஒன்றை ஒன் இந்தியா தமிழ் தளத்தின் வாசகர் எழுதியுள்ளார்.

ஹாசினியே ஒளிர்ப் பூந்தளிரே

சுடர்க்கொழுந்தே சுந்தர மகளே சிந்திய பால் முகமே
செய்தி வரிகள் செதுக்கிய துயர்ச்சிலையே
கயக்கொடும்பாவி கசக்கி எரித்த ஹாசினியே ஒளிர்ப் பூந்தளிரே
சிந்திய செந்துளிகள் காற்றைப் பொசுக்குதடி
செல்லமே உன் கண்ணீர் நெஞ்சை அரித்துப் பிழியுதடி.

A Poem written by a One india reader on Hasini murder

அற்பர் கொழுத்த பூமியில் பிறந்தாய் அன்றி வேறென்ன தவறு நீ செய்தாய். செப்பித்தரிந்த செழுந்தமிழ் மழலை இனி எப்படி எங்கள் கரங்களில் தவழும்
குற்றம் புரிதல் தொழிலான தெருக்களில் இனி குழந்தைகள் வலம் வரவோ
அறம் செத்தே போனபின் இங்கு அரசென்று ஒரு கேவலமோ
கொள்ளிக்கட்டைகள் தெருவிளக்காம் அவை குடித்து முடித்த பின் விசாரணையாம்
வெள்ளி நிலவுகள் வீழ்ந்த இரவில் இருட்டின் குறட்டை
அல்லிவெள்ளை அழகு கண்ணே உன்னை அழிக்க விட்டே கண்கள் கெட்டோம்
பிள்ளைகள் பெண்டிர் வாழ்வதற்கில்லை
இனி
கொள்ளை பூமியை கொளுத்தி அழிப்போம்

-இராஜ்குமார் பரமானந்தம்

English summary
A Poem writen by a One india reader on Hasini murder. The convict Dhashwand sentenced to death by the Chengalpattu court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X