For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியாயம் தானா....?

Google Oneindia Tamil News

சென்னை: பெண்ணுக்கு ஒவ்வொரு பெயர்.. ஒவ்வொரு அவதாரம். ஆனால் பெண்ணை பெண்ணாக அவரது இயல்பில் ரசிப்போர் எத்தனை பேர்.. இயல்பாகவே இருக்க விடுவது எங்காவது நடக்கிறதா. இல்லை என்பதே பதிலாக உள்ளது. இது ஆண் குலம் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம். பெண்ணை பெண்ணாக பார்ப்பதும், இயல்பாக இருக்க விடுவதும்தான் உண்மையில் பெண்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. அதை செய்யலாமே.

International Womens Day: How many avatar for women?

பெண்ணை மலர்
என்றான் கவிஞன் _ கவிதையில்
பெண்ணை சக்தி
என்றான் பக்தன் _ வழிபாட்டில்
பெண்ணை அழகு
என்றான் ஓவியன் _ சித்திரத்தில்
பெண்ணை மான்
என்றான் புலவன் _ காவியத்தில்
பெண்ணை பவித்திரம்
என்றான் புனிதன் _ சரித்திரத்தில்
பெண்ணை நதி
என்றான் நாடோடி _ பயணத்தில்
பெண்ணை அன்னை
என்றான் மகன் _ இல்லத்தில்
பெண்ணை தேவதை
என்றான் காதலன் _ காதலில்
பெண்ணை மனைவி
என்றான் கணவன்_ குடும்பத்தில்
ஆனால் ஏனோ மனிதன்....
பெண்ணை பெண்
என்று கூறவில்லை _ சமூகத்தில்...

_ இரா. சக்திவேல்,
மதுரை

எதிர் நீச்சல் போடும் என் குல பெண்களே! எதிர் நீச்சல் போடும் என் குல பெண்களே!

English summary
Our reader Sakthivel from Madurai has sent this poem on International Women's day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X