For Quick Alerts
For Daily Alerts
Just In
உன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி!
- அதியணன்
என்னவளே!
சென்னையிலே சிரபுஞ்சி
செங்கல்பட்டில் ஊட்டியென்று
உன்னாலே மாறுதடி
உயிர் வானவில்லாய் ஆகுதடி
புல்மேலே பனித்துளி
பூ தாலாட்டு பாடச்சொல்லி-உன்
கொலுசை கொஞ்சி கேட்குதடி
குயில்கள் அஞ்சி அதை பார்க்குதடி.

மாமல்லையில் திமிங்கலங்கள்
மாநாடு போடுதடி - உன்
கண் மீனை காதலிக்க
கடலை விட்டும் அது துள்ளுமடி
கடலூரில் கப்பலெல்லாம்
கால் முளைத்து நடக்குதடி - உன்
கரு நிழலுக்கும் முத்துவைக்க
கனவு கண்டு அது சொக்குதடி .