For Daily Alerts
Just In
ஒரு சிறகும்... என் சிந்தனையும்!
-மனோ
"உயரப் பறக்கிறேன்...
தலை உயர்த்தி,
சிறகசைத்து,
உறுதியோடு..."
மோதிச்செல்லும் காற்றைக் கிழித்து,
முனைப்போடு முந்திச் செல்கிறேன்...
தொலைதூரத்தில்
அரை நிலவாய் ஒருபிம்பம்..!
வறண்ட நாவோடு, திறந்தவெளியில்
ஓர் தனிமைப் பயணம்...
"தொட்டுவிடும்தூரம் தொலைவில் இல்லை..."
உள்ளுக்குள்ளே
உறங்காத ஓர்
உத்வேகம்...

தொலையும் நினைவுகளோடும்,
தொலைதூரக் கனவுகளோடும்...
ஒருக்களித்து உறைந்துவிட
உள்மனது ஒப்பவில்லை.
சிறகை விரித்து விட்டேன்...
நின்னைத் தேடத் துவங்கி விட்டேன்...
உதிரும் இறகுகள், உதிராத கனவுகள்
உரசும் காற்றினை உந்தித் தள்ளிவிட்டு...
"உயரப் பறக்கிறேன்...
தலை உயர்த்தி,
சிறகசைத்து,
உறுதியோடு..."