• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதயம் வைத்துக் காப்பதே தேசபக்தி

|

-கவிஞர் துள.கரிசல் கவிஅன்பு

நாட்டுப்பண் பாடியதும் - உடல்

நரம்புகள் புடைப்பதல்ல தேசபக்தி

நாட்டின் பிரச்சனைகள் களைய- நாம்

நாளும் உழைப்பதே தேசபக்தி !..

Republic day special Poem

கொடியேற்றி சுதந்திர தினம்

கொண்டாடுவது மட்டுமல்ல தேசபக்தி-சாதி

கொடுமைகள் செய்ய நினைக்காத

கொள்கையுடன் வாழ்வதே தேசபக்தி !..

பாரதமாதா படத்தினை வைத்து குனிந்து

பணிவது மட்டுமல்ல தேசபக்தி-உயர்

பட்டம் பெற்றும் பலநாட்டில் வசியாமல் -நம்

பாரத மக்களுக்கு பணியாற்றுவதே தேசபக்தி !....

தியாகிகள் பெருமை நினைந்து

தினம் பேசுவது மட்டுமல்ல தேசபக்தி

தனித் திறமையதை வளர்த்து உலகில் - நம்

தேசத்தின் புகழ் உயர்த்துவதே தேசபக்தி !.....

இந்தியா என் தாய்நாடென்று வெறுமனே

இயம்புவது மட்டுமல்ல தேசபக்தி-நம்

இன ஒற்றுமை, இயற்கைவளம் சீரழியாமல்

இதயம் வைத்து காப்பதே தேசபக்தி !....

குடியரசு தின வாழ்த்துகள்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Republic day special Poem by our reader Thula Karisal Kavianbu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X