For Quick Alerts
For Daily Alerts
அன்பு சூழ் உலகு
வண்டுகள் மலர்களை கொண்டாடுகின்றன
நிழல் வைத்து காத்திருக்கிறது மரம்
பறவைகளின் கவியரங்கில் கைத்தட்டுகின்றன இலைகள்
தன் குஞ்சுகளை சுற்றியே வட்டமடிக்கிறது கோழி

விடியலை ஆவலுடன் கூவி அழைக்கிறது குயில்
பழங்களை அடைகாத்து தருகிறது புளியமரம்
தடவிக்கொடுக்கும் அன்பில்
தன் கொம்புகளை மடக்கிக்கொள்கிறது மாடு
மின்மினிக்குள்ளும் அத்தனை வெளிச்சங்கள்
மீன் குஞ்சுகள் முத்தமிட்டுக்கொள்ளும் பேரன்பை
அழகாக படம்பிடிக்கிறது நீர்குமிழி
அன்பு சூழ் உலகில் நீ என்னவாக இருக்கிறாய் ?
- கவிஞர் பாரி கபிலன்