மரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை

சென்னை: அடிப்படையிலேயே வாஜ்பாய் ஒரு பத்திரிகையாளர். பல தினசரி நாளிதழ்களில் வேலை பார்த்தவர்.
எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போவெல்லாம் கவிதைகளை எழுத ஆரம்பித்துவிடுவதுதான் இவரது விருப்பமும், பொழுதுபோக்கும். இப்படி தனது கவிதைகளைளெயல்லாம் தொகுத்து நூலாக கூட வெளியிட்டு உள்ளார். அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

ஒருமுறை நியூயார்க்கில் இருந்தபோது அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது வாஜ்பாய் ஒரு கவிதை எழுதினார். அந்த கவிதை மரணத்தை பற்றியது. அதற்கு "மரணத்தோடு மோதிவிட்டேன்" என்று தலைப்பு போட்டார். மரணத்தை பற்றி தான் மனசில் என்ன நினைத்திருந்தார் என்பதை அந்த கவிதை வெளிப்படுத்தியது.
கவிதையின் சில வரிகள்...
மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம்
ஏன் பயம் கொள்ள வேண்டும்?
மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரிட்சித்துப் பார்.
இவ்வாறு மரணம் குறித்து வாஜ்பாய் எழுதியிருந்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!