For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் முதல் கவிதை நீ!

Google Oneindia Tamil News

ரோஜாக்கள் இல்லை
பரிசொன்றும் தரவில்லை
எங்கோ ஒளிந்து நின்று
ஓரக்கண்ணால் பேசினாய்..
வியர்த்துக்கொட்டி
வேற்றுக்கிரகத்துக்கு போனவனாய்
விக்கித்து நின்றேன்
இப்படித்தானே தொடங்கியது
நம் காதல் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல்..?!!

Valentines day You are my first poem

கணக்குப்புத்தகத்தின்
கடைசி பக்கத்திலும்
அறிவியல் நோட்டின்
மிச்சமுள்ள பக்கங்களிலும்
எத்தனை முறை
உன் பெயரெழுதி கிறுக்கி
எனக்குள் நானே
சிலாகித்திருந்திருப்பேன்..!??

பூவாக பூத்த காதல்.. உங்கள் கதைகளைச் சொல்லுங்கள்.. எங்கள் இதயங்களுக்கு!பூவாக பூத்த காதல்.. உங்கள் கதைகளைச் சொல்லுங்கள்.. எங்கள் இதயங்களுக்கு!

பேச்சுப்போட்டியில்
கட்டுரைப்போட்டியில்
பாட்டுப்போட்டியில்
திருக்குறள் ஒப்புவித்தலில்
நான் முதலிடம் வாங்கும் போதெல்லாம்

எனக்கே தெரியாமல்
நீ கைத்தட்டி ரசித்து
உன் தோழிகளுக்கு காட்டிக்கொடுத்து
மேடையிலென்னை
மெய்யுருக ரசிப்பாயே..!!

நானெழதிய
முதல் கவிதையே உன் பெயர் தான்..?!!

- ப.ஷேக் அலாவுதீன்
திருநெல்லிக்காவல்

English summary
Valentines day: You are my first poem, says our reader Sheik Alaudin from Thirunellikaval.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X