For Daily Alerts
பெண்ணெனும் பேரொளி!
- ஆகர்ஷிணி
சூரிய தந்தை
பூமி தாய்
நிலவு பிள்ளை

ஒரு பெண்ணின் வாழ்வு
கணவனாலோ மகனாலோ
ஒளிபெறும் காலம் மகளிர் தினம்!
இரண்டும் கிடைக்காத நேரம்
அவளுக்கு அமாவாசை!
இயற்கை காட்டி யாரும் கூறலாம்!
ஆனால், இரண்டின் துணையுடன்
அவளே அழகாய் ஒளிரும்
தினமே மகளிர் தினம்!
பெண்ணில்லா குடும்பம்
அமாவாசை இரவு!