For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு நாவல் ஒரு கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

கலாச்சார மாத இதழ் - ஜூன் 2005

இங்ரிட் பெர்க்மன் - 4

ச.தமிழ்ச்செல்வன்

எர்னஸ்ட் ஹெமிங்வே சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் தங்கியிருந்தார்.பீட்டருடன் இங்ரிட் காரிலும் ரயிலிலுமாகப் பறந்து சென்றுஹெமிங்வேயையும் அவருடைய மனைவி மார்த்தா கெல்ஹார்னையும் உரிய நேரத்தில் சந்தித்தாள். இங்ரிட்டின் உருவத்தை சற்றுநேரம் ஆழ்ந்து நோக்கினார் ஹெமிங்வே. பியாவுடன் கிராமத்தில் ஐஸ் பந்து விளையாடி -ஐஸ்கிரிம் தின்று எனஇருந்துவிட்டோமே என்ற பதட்டம் இங்ரிட்டுக்கு. முகமெல்லாம் கூடுதலாக ரோஸ் வண்ணம் பூத்திருந்தது. ஓ.கே. நான்கவலைப்பட வேண்டியதில்லை என் மரியாவை உன்னிடம் ஒப்படைக்கலாம் என்று சிரித்தபடி அவர் சொன்ன பிறகுதான்இங்ரிட்டின் முகரேகைகள் மாறி மலர்ந்து சிரித்தாள். ஸ்பானியப் பெண்ணான மரியா பாத்திரத்திற்காக ஒரு ஸ்பானியநடிகையைத் தேர்வு செய்யாமல் நார்டிக்கான என்னை ஏன் அழைத்தீர்கள்? என்று கேட்டாள். ஸ்பானியப்பெண்களும்உன்னைப்போலவே வளர்த்தியாகவும் பொன்னிறமாகவும்தான் இருக்கிறார்கள். கவலைப்படாதே. உனக்கே இந்த ரோல்கிடைத்துவிடும் என்று உற்சாகப்படுத்தினார். என்றாலும் திரும்பி வரும் வழியில் பாராமவுண்ட் பிக்சர்ஸ்காரர்கள்எழுத்தாளருடைய தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்கிற கவலை அவளைத் தின்ன ஆரம்பித்தது.

ஆனாலும் உடனடிய ா க ஒன்றும் நடக்கவில்லை. ஹெமிங்வே சீனாவுக்குப் போய்விட்டார்.இங்ரிட் மீண்டும் படமோ நாடகமோஇல்லாமல் வீட்டில் கிறுக்குப்பிடித்து அலைந்து கொண்டிருந்தாள். ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு 1942ஏப்ரல் 21காலையில்தான் செய்தி வந்தது. அடுத்த படம் காசாபிளாங்க்கா (Casablanca)

அன்புள்ள புத்தகமே,

உண்மையில் அந்த நாள் அப்படியாகக் கழியும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. எப்படியும் அடுத்த படம் ஒன்று எனக்குவரும் அதற்கு உரிய கால அவகாசம் ஆகும் என்று எனக்குத் தெரியும்தான். ஆனாலும் வார்னர்ஸ் கம்பெனியின்காசாபிளாங்க்காவில் நான் இருக்கிறேன் என்ற செய்தி கேட்டதும் எனக்குக் கடுமையான தலைவலி வந்துவிட்டது. படுக்கையில்விழுந்தால் படுத்திருக்க முடியவில்லை. கொண்டாடுவதற்காக மதிய உணவுக்கு முன்னால் குடிக்கலாம் என்றால் குடிக்கமுடியவில்லை. கதறி அழவேண்டும் போல இருந்தது. ஆனால் அழுகை வரவில்லை. வெடித்துச் சிரிக்க ஆசைப்பட்டேன்.ஆனால் ஒன்றுமே செய்ய டியவில்லை. மூன்று றை படுக்கையில் விழுந்தும் தூக்கம் வரவில்லை. விடிய விடிய இதுதான் கதை.படுக்கையில் புரண்டு உருண்டு நெளிந்து கொண்டே கிடந்ததால் பீட்டரும் தூங்க முடியவில்லை. ஆனால் இப்போது காலை.எல்லாம் ஒரு நிதானத்துக்கு வந்துவிட்டது.

இந்த ஓராண்டு இடைவெளிக்குள் ஹாலிவுட்டில் இங்ரிட் மறக்கப்பட்டுவிடவில்லை. ஆனாலும்

முதல் ஐந்து டாப்ஸ்டார் பட்டியலிலிருந்து கீழே இறங்கிவிட்டாள் என்று பேசிக் கொண்டார்கள். இந்தப் பட்டியல் பற்றியெல்லாம்அவள் எப்போதும் கவலைப்பட்டதில்லை. அவளுக்குத் தேவை இடைவிடாத வேலை. அவளுடைய வாழ்க்கையிலேயேவதையும் வாதையுமான ஆண்டாக 1941 அமைந்திருந்தது. இப்போது 1942 மே யில் மீண்டும் அவளுடைய எலிவண்ணக்கார்ஹாலிவுட்டில் வார்னர்ஸ் செட்டுகளை நோக்கி.

காசாபிளாங்க்காவில் மீண்டும் அதே(முக்கோணக்காதலில்) இளம் காதலி என்கிற கூண்டுக்குள் என்னை அடைத்தார்கள்.என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் ஹாலிவுட் அடம் பிடித்து நிற்கிறது.மிகப்பெரிய ஜாம்பவான்களானகேரி கூப்பர்,ஜேம்ஸ் ஸ்டூவர்ட்,கேரி கிராண்ட்,ஹம்ஃப்ரெ போகார்ட் எல்லோருக்கும் இதே கதிதான். அவர்கள் படத்தில்அவர்களாகவே வருவார்கள். ஆனால் ஸ்வீடனில் அப்படி அல்ல. நடிப்பு என்றாலே மாற்றம் என்றிருக்கும். வயதானவராகநடிப்போம். இளையவராக நடிப்போம். நல்லவராக -கெட்டவராக -கேடு கெட்டவராக- அழகானவராக -நாத்தம் பிடித்த மனிதராகஎப்படி வேண்டுமானாலும் நடிப்போம். ஆனால் நான் நானாகவே திரையில் நடிப்பதுமட்டும் அங்கு ஒருபோதும் கிடையாது.காசாபிளாங்க்காவின் இயக்குநர் மைக்கேல் குர்ட்டிஸ் என் கருத்தை மறுத்தார். அப்படி அல்ல.அமெரிக்கர்கள் செய்வதுtype-casting. பணம் கொடுக்கும் ரசிகர்கள் கேரி கூப்பரை எல்லாப் படத்திலும் கேரி கூப்பராகவே பார்க்க விரும்புகிறார்கள்.அதற்காகவே திரை அரங்குகளுக்கு வருகிறார்கள் என்றார். என்னால் அதை ஏற்க முடியவில்லை. நான் மாறிக்கொண்டேதான்இருப்பேன் முடிந்தவரைக்கும் அதிகபட்சமாக.

ஆனால் காசாபிளாங்க்கா படம் எடுக்கப்பட்ட காலம் முழுவதும் ஒரே குழப்பம்தான். திரைக்கதை என்னவென்று கடைசிவரைமுழுசாக யாருக்குமே தெரியவிலை. ஆரம்ப நாளிலிருந்து தயாரிப்பாளர் ஹால் வல்லிஸ் திரைக்கதையாசிரியர்களானஎப்ஸ்டீன் சகோதரர்களுடன் சச்சரவிட்டுக்கொண்டேயிருந்தார். இயக்குநரும் தயாரிப்பாளரும் எப்போதும் மோதிக்கொண்டேஇருந்தனர். குர்ட்டிஸ் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நல்ல மனிதர். இங்ரிட் இப்படியான ஒரு குழப்பத்துடன் எப்படத்திலும்நடித்ததில்லை. இரண்டு நாயகர்களில் யாரை நான் உண்மையில் காதலிக்க வேண்டும்? என்று படம் ஆரம்பித்த நாளிலிருந்தேஇயக்குநரைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். அது எனக்கே தெரியாதம்மா. இன்னைக்கு காட்சி இப்படி இருக்கட்டும்.மீதிக்கதையை நாளைக்குப் பார்ப்போம். படம் முடியும் வரைக்கும் இப்படியான குழப்பத்துடனேதான் நகர்ந்தது. அதுஇங்ரிட்டுக்கு அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிப்பதில் பெரும் தடையாக இருந்தது. அமெரிக்கப்படங்களில் காதலைமுத்தமிட்டுத்தானே வெளிப்படுத்துவார்கள்? இங்ரிட் முன்னே பின்னே பழகாத ஒரு நடிகருக்கு செட்டில்- காமிராவுக்குமுன்னால் திடீரென்று முத்தம் கொடுக்க முடியாது. அவள் எப்போதும் தனக்கு ஜோடியாக நடிப்பவருடன் பல மணி நேரம்செலவிட்டுப் பேசிப் பழகி அவரது கதாபாத்திரத்துடன் தானும் நெருக்கமானவராகி -சில சமயம் மேக்-அப் அறையில் அவருக்குத்தமிட்டு அதை சாதாரணமாக்கிப் பின் காட்சியின்போது அதே முத்தத்தை உயிருள்ளதாக்கி என ஒரு நீண்ட வரிசையிலானவழிமுறை இங்ரிட்டின் பாணியாக இருந்தது. இப்படம் அதையெல்லாம் காலி செய்துவிட்டது. யாரைக்காதலிப்பது என்பதேதெரியாமல் யார்மீதும் காதல் பார்வையை வீச முடியாமல் மனநிறைவில்லாமல் ஒவ்வொருநாள் படப்பிடிப்பும் நகர்ந்தது.கடைசிக்காட்சி படம்பிடிக்கப்பட்ட நாளிலும் குழப்பம்தான். இங்ரிட் தன் பழைய காதலனுடன் தங்கி விடுகிறாளா? அல்லதுகணவனுடன் விமானம் ஏறிச்செல்கிறாளா? என்று முடிவு செய்ய முடியாமல் யூனிட் தவித்தது. கடைசியில் இரண்டுமுடிவுகளுமே படம் பிடிக்கப்பட்டன. படம் இரண்டு கிளைமேக்ஸ்களுடன் வெளியானது.

உலக வர்த்தக சினிமா வரலாற்றில் யார் எந்த வகையில் பட்டியலிட்டாலும் முதல் பத்து சினிமாக்களில் ஒன்றாக இன்றுவரைமதிக்கப்படுகிற படமாக Casablanca நின்று நிலைத்துவிட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல்லாண்டு காலம்பேசப்படுகிற (a classic, a cult and a legend) படமாக வெற்றி பெற்றுவிட்டது. அதற்கு முமுக்கிய காரணம் அப்படம்வெளியான உலகச்சூழல். 1942-43 இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் புகை கக்கிக்கொண்டிருந்த நேரம். காசாப்ளாங்க்காஎன்பது பிரஞ்சு ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஆப்பிரிக்க (மொரோக்கோ நாட்டின்) நகரம். குண்டுகளுக்கிடையேசிதறிக்கொண்டிருந்த ஐரோப்பாவிலிருந்து தப்பி யுத்தமில்லாத அமெரிக்காவுக்குச் செல்ல மொரொக்கோ வழியாகத் தான் மக்கள்செல்லவேண்டியிருந்தது. எனவே காசாபிளாங்க்கா என்பது சுதந்திரத்தை சமாதானத்தை நிம்மதியை அடைவதற்கான ஒரு முமுன்நிலையாக உணரப்பட்டது. ரூஸ்வெல்ட்டும், டிகாலேயும், ஐசனோவரும் முமுக்கூட்டு மகாநாடு நடத்த காசாபிளாங்க்காவையேதேர்ந்தெடுத்ததுமான அரசியல் முமுக்கியத்துவமும் அப்பெயரைப் பிரபலமாக்கியிருந்தது. இழந்துபோன காதலையும்அன்பையும் சமாதானத்தையும் பற்றிப் பேசுவதாக அப்படம் அமைந்தது. 34 தேசங்களைச் சேர்ந்த கலைஞர்கள் அப்படத்தில்நடித்திருந்ததும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையில் For Whom the Bell Tolls படத்தில் மரியா பாத்திரத்தில் நடிக்க வேரா என்ற நடிகை தேர்வு செய்யப்பட்டுபடப்பிடிப்பும் துவங்கியிருந்தது.

அது எனக்குப்பெரிய ஏமாற்றம்தான். ஆனால் இச்ண்ச்ஞடூச்ணஞிச் படப்பிடிப்பு முமுடியும் சமயத்தில் ஒரு செய்தி வந்தது.வேராவுடன் வார்னர் பிரதர்ஸ் மகிழ்ச்சியாக இல்லை. அதில் வேராவின் குற்றம் ஒன்றுமில்லை. அப்படம் யுத்த களத்தில் நடக்கும்கதையை மையமாகக் கொண்டது என்பதால் மலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்ட போர்க்களத்தில்(செட்தான்) பறக்கும்விமானங்களுக்கும் அவை கிளப்பும் புழுதிகளுக்கும் இடையே கரடுமுரடான தளத்தில் ஒரு காட்டு விலங்கைப்போல ஓடியாடிநடிக்க வேண்டியிருந்தது.அடிப்படையில் ஒரு பாலே கலைஞரான வேரா தன் பாதங்கள் பாழாகி விடுமோ என்ற அச்சத்துடனேநடித்துக்கொண்டிருந்தார். எனக்கு என் முமுகம் எப்படியோ அப்படியல்லவா அவருக்கு அவருடைய கால்கள்? வார்னர் பிரதர்ஸ்வேராவை நீக்கிவிட்டனர்.

ஒரு டெஸ்ட்டுக்கு வரமுமுடியுமா என்று கேட்டார்கள். மரியா பாத்திரத்துக்கு கத்தரிக்கப்பட்ட தலைமுமுடி வேண்டும்.முமுடியை கத்தரித்துக்கொள்ள நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மரியாவுக்காக என் தலையையேகத்தரிக்கவும் நான் சம்மதிப்பேன் என்று பதில் சொன்னேன்.

(தொடரும்)

[email protected]

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X