2022 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது
சென்னை: 2021ஆம் ஆண்டு முடியப்போகிறது. புத்தாண்டு பிறக்கப் போகிறது. புதிதாக பிறக்கப் போகும் 2022ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்குமா என்ற ஏக்கம் அனைவருக்குமே இருக்கும். புத்தாண்டில் துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு அமையுமா? என்றும் அரசு வேலை யாருக்கு கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.
2021ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனி பத்தாம் இடமான மகரம் ராசியிலும் 11ஆம் வீடான கும்ப ராசிக்கும் செல்கிறார். தற்போது லாப வீட்டில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருவும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று மீனம் ராசியில் அமரப்போகிறார். பின்னர் வக்கிரமடைந்து கும்ப ராசிக்கு சென்று மீண்டும் நவம்பர் மாதத்தில் மீன ராசிக்கு செல்வார். ராகு பகவான் ஏப்ரல் மாதத்தில் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பயணம் செய்கிறார்.
நவ கிரகங்களில் ஒருவர் ஜாதகத்தில் கிரகங்களின் அமைவு வெளிநாடு செல்லும் யோகத்தை தீர்மானிக்கும். சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும். சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கிரகங்கள் ஆகும். 2022ஆம் ஆண்டு துலாம், விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

எதிர்பாராத பதவி உயர்வு
சுக்கிரன் ராசியை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் 2022 ஆண்டு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. வேலையில் புதிய மாற்றம் கிடைக்கும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி சாதகமாக உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. அரசு வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். நல்ல கல்லூரியில் படிக்க வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகம் கை கூடி வரும். வேலைக்காகவும், உயர்கல்விக்காகவும் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தொட்டது துலங்கும் ஆண்டு
திருமணத்திற்காக நீண்ட நாட்களாக வரன் பார்ப்பவர்களுக்கு 2022ஆம் ஆண்டு சுப காரியங்கள் நடைபெறும். வரன் பார்க்கும் போது திருப்தியான மனதிற்குப் பிடித்த வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே இனி சந்தோஷமும் குதூகலமும் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். குருவின் பார்வை உங்களுக்கு சுபத்தை கொடுக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டு தொட்டது துலங்கக் கூடிய ஆண்டாக அமையப்போகிறது.

விடிவு காலம் வந்து விட்டது
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு பிறக்கப்போகும் 2022ஆம் ஆண்டு புத்தாண்டு நிறைய நன்மைகளையும் அதிர்ஷ்டங்களையும் தரப்போகிறது. பல ஆண்டுகாலமாகவே கஷ்டத்தை அனுபவித்து வரும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கப் போகிறது. ஜென்ம கேது ஏழாமிடத்து ராகுவினால் நிறைய தொல்லைகளையும் சங்கடங்களையும் அனுபவித்து வந்த உங்களுக்கு குரு சனியால் எந்த தொந்தரவும் கிடையாது. நல்ல வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு புரமோசன், பதவி உயர்வு தேடி வரும். தொழிலை விரிவுபடுத்தலாம்.

அதிர்ஷ்டகரமான ஆண்டு
திருமண சுப காரியங்கள் நடைபெறும். மனம் விரும்பிய வாழ்க்கை கை கூடி வரும். காதல் கை கூடி பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் நடைபெறும். குருவின் புண்ணியத்தால் புத்திரபாக்கியம் கை கூடி வரும். சிலருக்கு இரண்டாம் திருமணம் சாத்தியமாகும். வெளிநாட்டு யோகம் கை கூடி வரப்போகிறது. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வி யோகங்கள் கை கூடி வரும். குருவின் ஆசியுடன் கல்வியை சிறப்பாக தடைகள் இன்றி முடிப்பீர்கள். 2022ஆம் ஆண்டு நினைத்தது நிறைவேறும் அதிர்ஷ்கரமான ஆண்டாக அமைந்துள்ளது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் ஆண்டாக அமைந்துள்ளது.