For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர், சொரிமுத்து ஐயனார் கோவில்களில் ஆடி அமாவாசை விழா ரத்து

கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஆடி அமாவாசை தினத்தில் திருமூர்த்திமலைக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சொரிமுத்து ஐயானார் கோவிலுக்கும் ஆடி அமாவாசைக்கு யாரும் வ

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு தடை உள்ளதால் ஆடி அமாவாசைக்கு யாரும் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடுமலை அருகே, திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். அமாவாசை நாளில் பாலாற்றின் கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வழிபடுவது வழக்கம் சுற்றுப்புற கிராம விவசாயிகள் மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

மூத்தோன் முருகன் முப்பாட்டன்.. ஆபாச கதைகள்.. கொச்சைப்படுத்தி கல்லெறிவது கயமைத்தனம்.. சீமான் தாக்கு!மூத்தோன் முருகன் முப்பாட்டன்.. ஆபாச கதைகள்.. கொச்சைப்படுத்தி கல்லெறிவது கயமைத்தனம்.. சீமான் தாக்கு!

Aadi amavasai festival cancels in Tirumurthi Malai and karaiyar Sorimuthu Ayyanar Temples

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திருமூர்த்திமலைக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோவிலில் தினசரி பூஜைகளை மட்டும் சிவாச்சார்யார்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தாண்டு ஆடி அமாவாசை வரும் 20ஆம் தேதி வருவதை முன்னிட்டு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அமாவாசை திதி கொடுக்கவும், தரிசனத்திற்காகவும் திருமூர்த்திமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அரசு உத்தரவுபடி சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பதில்லை. மறு உத்தரவு வரும் வரை இதே நிலை நீடிக்கும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆடி அமாவாசையன்று கோவிலில் சுவாமி தரிசனத்திற்கும் தர்ப்பணம் கொடுக்கவும் திதி செய்யவும் அனுமதிக்க முடியாது. பக்தர்கள் மாட்டு வண்டிகளிலோ, மற்ற வாகனங்களிலோ கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Aadi amavasai festival cancels in Tirumurthi Malai and karaiyar Sorimuthu Ayyanar Temples

காரையாறு சொரிமுத்து ஐயனார் கோவில் ஆடி அமாவாசை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான காரையாறில் அமைந்துள்ளது அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோவில். குலதெய்வம் கோவில் தெரியாதவர்கள் இந்த கோவிலையே குல தெய்வக் கோயிலாக பின்பற்றுவார்கள். இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா பத்து நாட்கள் சிறப்பு வழிபாடுகளுடன் நடத்தப்பட்டு வெகுவிமரிசையாக நடைபெறும்.

தமிழகம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோவில் விழாவிற்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் கோவிலில் வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சொரி முத்து அய்யானார் கோயில் திருவிழா மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல முக்கிய கோவில்களின் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலிலும் ஆடி அமாவாசை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

English summary
Aadi amavasai festival will be canceled in Udumalai pettai Tirumurthi malai and Sorimuthu Ayyanar temple due to coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X