For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசனைப் போல வாழ்க்கை அமைய வேண்டுமா - இன்று ஆனி கேட்டை முருகனை வழிபடுங்க

ராஜாவைப் போல செல்வ வளத்தோடு வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். இன்றைய தினம் ஆனி கேட்டையில் முருகப்பெருமானை வழிபட்டால் இந்திரனைப் போல வாழ்வு அமையும்.

Google Oneindia Tamil News

சென்னை: கேட்டை நட்சத்திரம் தேவர்களின் அதிபதி இந்திரனுக்கு உரியது. அதுவும் ஆனி மாத கேட்டை நட்சத்திரம் அற்புதமானது. அன்று ஜேஷ்டா அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் இந்திரனைப் போல ராஜயோக வாழ்வு அமையும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேத ஜோதிடம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள்தான் ஆனி கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் மிதுன மாதம். ஆனி மாதம் வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். ஆனி மாதத்தில் மிக நீண்ட பகல் பொழுது இருக்கும். இது பெரிய மாதமும் கூட. இந்த மாதத்தில்தான் ஆனி திருமஞ்சனம் உள்ளிட்ட பல முக்கிய விழாக்கள் நடைபெறுகின்றன.

ஆனி உத்திரம், ஆனி கேட்டை, ஆனி மூலம் சிறப்பு வாய்ந்தது. ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும்.

நம்ம அறிவுமணியா இது.. கண்ணில் எண்ணெய் ஊத்தி பார்க்கும் ரசிகர்கள்!நம்ம அறிவுமணியா இது.. கண்ணில் எண்ணெய் ஊத்தி பார்க்கும் ரசிகர்கள்!

இந்திரனின் வழிபாடு

இந்திரனின் வழிபாடு

கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள்தான் ஆனி கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

பெருமாள், முருகனை வழிபடலாம்

பெருமாள், முருகனை வழிபடலாம்

ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் ஆனி கேட்டையில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். இன்று நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. பழனியில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். இன்றைய தினம் பெருமாளையும், முருகப்பெருமானையும் வழிபட அரச யோக பதவி கிடைக்கும்.

கோவிந்தராஜ பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்

கோவிந்தராஜ பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்

திருப்பதி கோவிந்த ராஜ பெருமாள் கோவிலில் ஆனி ஜேஷ்டாபிஷேகம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. உற்சவ மூர்த்திக்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் அகற்றி பால், தயிர், தேன், இளநீர் மற்றும் மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்களுடன் சிறப்பு யாகம் நடைபெற்றது.

அரசனை போல வாழ்வு

அரசனை போல வாழ்வு

அரசனைப் போல செல்வ வளம் பெற்று வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று முருகப்பெருமானையோ, பெருமாளையே அபிஷேகம் செய்து வழிபட அரச பதவி தேடி வரும். இந்த நாளில் உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெரிய நிர்வாகத்தைக் கட்டி ஆளும் தொழில் அதிபர்கள் அருகில் உள்ள ஆலயத்தில் ஆண்டவனுக்கு விசேஷ அபிஷேகத்துடன் கூடிய பூஜைகள் செய்து வழிபட தலைமைப்பதவி செழிக்கும் நிர்வாக திறமை பளிச்சிடும். அரச பதவிக்கு நிகரான பதவி அரசியல் பதவி, அரசியல் பதவி வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம்.

English summary
Aani is also called as Jyeshta month in Sanskrit which means senior and true to this Aani is the longest month. Indra worships Maheshwara in Aani coinciding with the Star Jyeshta or Kettai, to retain his status as the Head of Devas and to improvise
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X