• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி : மார்கழி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள், விழாக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மார்கழி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்வார். தனுர் மாதம் என்றும் மார்கழி மாதம் போற்றப்படுகிறது. மார்கழி மாதத்தில் சிவன், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவை, திருவெம்பாவை திருவிழாக்கள் நடைபெறும். ஆருத்ரா தரிசனம்,வைகுண்ட ஏகாதசி போன்ற பண்டிகைகளை கொண்டாடப்படுகின்றன. மார்கழி மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் எந்தெந்த நாட்களில் வருகின்றன என்று பார்க்கலாம்.

மார்கழி 1 டிசம்பர் 16 வியாழக்கிழமை அனங்க திரயோதசி கிருத்திகை விரதம், ஷடசீதி புண்ணியகாலம். தனுர் மாத பூஜை ஆரம்பம். அனங்க திரயோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்

Arudra Darshanam, Vaikunda Ekadasi: Important festivals in the month of Margazhi

மார்கழி 03 டிசம்பர் 18 சனிக்கிழமை பவுர்ணமி பூஜை , தத்தாத்ரேய ஜெயந்தி. ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்பது நம்பிக்கை. இவரை முறையாக வணங்கினால் ஞானமும் யோகமும் கைகூடும். மனோதிடமும் பெருகும்

மார்கழி 04 டிசம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை ஆருத்ரா அபிஷேகம், சிவ ஆலயங்களில் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். திரிபுர பைரவி ஜெயந்தி. முதுகு தண்டின் அடியில் மூலதார சக்ரத்தில் உறக்கத்தில் இருக்கும் குண்டலி சக்தியே திரிபுர பைரவி ஆகும். குண்டலியான பைரவி பிரணாயாமம் மூலம் தலை உச்சியிலுள்ள தாமரையை அடைந்து அமுதம் பொழியச் செய்து பின் தன்னுடைய ஸ்தானமான மூலாதாரத்திற்குத் திரும்புகிறாள். காலம் தவறாமல் திரிபுர பைரவியை உபவாசிப்பவர்கள் உலகினர் போற்றிடும் கீர்த்தியும் புகழும் பெறுவார்.

மார்கழி 05 டிசம்பர் 20 திங்கட்கிழமை ஆருத்ரா தரிசனம், மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று "திருவாதிரை" திருவிழா ஆருத்ரா தரிசனம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் "ஆதிரை" என்று அழைக்கப்படுகிறது. அதோடு திரு என்ற அடைமொழி சேர்த்து "திருவாதிரை" என்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். பெரிய திருவடி

மார்கழி 07 டிசம்பர் 22 செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம், பரசுராம ஜெயந்தி. தசாவதாரத்தில் மஹாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் மொத்தம் ஒன்பது. அதில் 6ஆவதாக எடுத்த அவதாரம் தான் பரசுராமர் அவதாரம். அதுவரை நிகழ்த்திய 5 அவதாரங்களிலும், எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் அசுரர்களை அழித்த மஹாவிஷ்ணு, பரசுராமர் அவதாரத்தில் தான் முதன் முதலில் ஆயுதத்தை பயன்படுத்தினார். சிரஞ்சீவியான பரசுராமர் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் இருக்கும் மகேந்திரகிரி என்னும் மலையில் தவம் செய்துகொண்டிருப்பதாக ஐதீகம்.

மார்கழி 10 டிசம்பர் 25 சனிக்கிழமை சஷ்டி விரதம் மந்தா சஷ்டி, கிறிஸ்துமஸ் விழா

மார்கழி 11 டிசம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை, பானு சப்தமி பூர்வேர்யு சர்வத சப்தமி. பானு சப்தமி நாளில் சூரிய பகவானை விரதமிருந்து வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமரக்கூடிய வாய்ப்பு கைகூடி வரும். உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் எதிரிகள் தொல்லை ஒளியும்.

மார்கழி 12 டிசம்பர் 27 திங்கட்கிழமை காசியில் காலபைரவாஷ்டமி, சங்கராஷ்டமி,மார்கழி தேய்பிறை அஷ்டமி சங்கராஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது.

மார்கழி 15 டிசம்பர் 30 வியாழக்கிழமை உற்பத்தி ஏகாதசி. ஏகாதசி விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வதுடன் முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் ! என்று அருளினார் பகவான் கிருஷ்ணர். இன்று உற்பத்தி ஏகாதசி கடைபிடிக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியன்று தான். அதனால்தான் இதற்கு உத்பான அல்லது உற்பத்தி ஏகாதசி என்று பெயர். அன்றிலிருந்து தான் இந்த ஏகாதசி ஆரம்பமாகி உள்ளது. இந்த ஏகாதசி விரதம் இருந்தால் பகையை வெல்லலாம்.

மார்கழி 16 டிசம்பர் 31 வெள்ளிக்கிழமை அகண்ட துவாதசி, பிரதோஷம்

மார்கழி 17 ஜனவரி 1 சனிக்கிழமை மாத சிவராத்திரி தொண்டரடிப்பொடியாழ்வார்

மார்கழி 18 ஜனவரி 02 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை ஸ்ரீஆஞ்சநேய ஜெயந்தி. மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர் இவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு.

மார்கழி 20 ஜனவரி 04 செவ்வாய்க்கிழமை, சந்திர தரிசனம்

மார்கழி 25 ஜனவரி 09 ஞாயிற்றுக்கிழமை, பானு சப்தமி, விஜய சப்தமி

மார்கழி 27 ஜனவரி 11 செவ்வாய்க்கிழமை, கூடாரவல்லி. கூடாரை கூட வைக்கும் இந்த திருநாளில் ஆண்டாளையும் அரங்கனையும் வணங்கினால் வரன் கூடாத மகளிருக்கு நல்ல இடம் அமையும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமா? நாம் விரும்பியவர்கள் மட்டுமில்லாமல் நம்மை விட்டு விலகிய உறவுகளையும் கூடச்செய்யும் அற்புதமான பாசுரம் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" பாடல். கூடாரவல்லி விரத நாளில் அரங்கனையும் ஆண்டாளையும் வணங்கி, பாசுரங்கள் பாடி, ஆண்டாளுக்கு புதுப்புடவை சாத்தி, அக்காரவடிசல் நைவேத்தியம் சமர்ப்பித்து வணங்கலாம்.

மார்கழி 28 ஜனவரி 12 புதன்கிழமை, மார்கழி கிருத்திகை விரதம்

மார்கழி 29 ஜனவரி 13 வியாழக்கிழமை சர்வ வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கம் தவிர அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை

English summary
The Sun travels in Sagittarius during the month of March. The month of Markazhi is also celebrated as the month of Tanur. During the month of Margazhi, the festivals of Thirupavai and Thiruvembavai are held at the temples of Lord Shiva and Lord Vishnu. Festivals like Arudra Darshan and Vaikunda Ekadasi are celebrated. Let's see which festivals fall on which days in the month of March.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X