பிப்ரவரி மாத ராசி பலன் 2022: ரிஷபம்,மிதுன ராசிக்காரர்கள் கவனத்தோடு செயல்படுங்கள்
சென்னை: பிப்ரவரி மாதத்தில் ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது என்றாலும் செயல்களில் கவனமும் நிதானமும் தேவை. வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம் இந்த மாதத்தில் சூரியன்,செவ்வாய்,சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்று விரிவாகப் பார்க்கலாம்.
பிப்ரவரி மாதத்தில் சூரியன் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் சஞ்சரிக்கப்போகிறார். மகர ராசியில் உள்ள சனி, சூரியன், புதன் கூட்டணி மாத பிற்பகுதியில் பிரியப்போகிறது. பிப்ரவரி 13ஆம் தேதி மகர ராசியில் உள்ள சூரியன் கும்ப ராசிக்கு சென்று குருவோடு இணையப்போகிறார். தனுசு ராசியில் உள்ள செவ்வாய், சுக்கிரன் மாத இறுதியில் இடப்பெயர்ச்சியாகி மகர ராசியில் உள்ள சனியோடு இணையப்போகிறார்.
நவகிரகங்களின் பயணம் பார்வையைப் பார்த்தால் ரிஷப பிறந்தவர்களுக்கு ராசியில் ராகுவும் கேது ஏழாம் வீட்டிலும் அமர்ந்துள்ளனர். சுக்கிரன் செவ்வாய் தனுசு ராசியில் 8ஆம் வீட்டில் இணைந்துள்ளார். மாத இறுதியில் ஒன்பதாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார் செவ்வாய் உச்சம் பெற்று சனியோடு இணையப்போகிறார். குரு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஒன்பதாம் வீட்டில் சூரியன், சனி, புதன் இணைந்திருப்பதால் வேலையில் புதிய முயற்சி உண்டாகும்.

உயர்கல்வி யோகம்
வேலையில் புதிய மாற்றங்கள் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இருக்கும் வேலையில் சிறப்பாக செயல்படுங்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். படிப்பில் கவனம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
பத்தில் குரு சிலருக்கு பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவார்.

கவனம் தேவை
ராகு ராசியில் பயணம் செய்வதால் சில குழப்பங்கள் ஏற்படும். உங்களின் பலத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். திருமண சுப காரியங்களில் சில தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும். எட்டாம் வீட்டில் சுக்கிரன் செவ்வாய் சுக்கிரன் பயணம் செய்வதால் மின்சாதனம், நெருப்பு சமையலறை, கூர்மையான ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. பணத்தை பத்திரமாகப் பயன்படுத்தவும். பெண்கள் வேலையில் இருப்பவர்களுக்கு பளு அதிகரிக்கும். உடல் சோர்வை உண்டாகும். தினசரி செய்யும் காரியங்களில் தடைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

சுப காரியத் தடைகள்
பிப்ரவரி மாதத்தில் மிதுன ராசிக்கார்களுக்கு விரைய ஸ்தானத்தில் ராகு,ஆறாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன், எட்டாம் வீட்டில் சூரியன், சனி, புதன், ஒன்பதாம் வீட்டில் குரு என நவ கிரகங்களின் பயணம் உள்ளது. செவ்வாய் சுக்கிரன், குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நல்ல செய்திகள் தேடி வரும்.
இந்த மாதத்தில் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மூன்று கிரகங்கள் பிரியப்போவதால் பண வருமானம் அதிகரிக்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும் என்பதால் பொறுமை காப்பது அவசியம்.

ஆரோக்கியத்திலும் கவனம்
பண விவகாரங்களில் கவனம் தேவை. அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டாம். ராசிநாதன் புதன் எட்டாம் வீட்டில் இருப்பதால் அவசரம் தேவையில்லை நிதானமாக பொறுமையாக வேலைகளை செய்யவும். பெற்றோரின் உடல் ஆரோக்கியம் உங்களின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. எதையும் திட்டமிட்டு காய் நகர்த்துங்கள். திருமணம் சுப காரியங்கள் தொடர்பாக இந்த மாதம் பேச வேண்டாம். காதல் விவகாரஙகளில் கவனம் தேவை. அவசரபப்பட்டு பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.