For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருட பஞ்சமி விரதம் - கருடனை வணங்கினால் நோய்கள் தீரும்,மாங்கல்ய பலம் பெருகும்

விபத்து நோய் நீக்கும் மருத்துவராகவும், பஞ்ச பக்ஷியின் ராஜாவாகவும் திகழும் ஸ்ரீ கருட பகவானுக்கு ஸ்ரீ கருட ஜெயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு நாகர் ஹோமம், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு மஞ்சள் தீர்த்த அபிஷே

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: கருட பஞ்சமி நாளில் பெண்கள் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகி வாழ்வில் வளம் பெறலாம்.

வாலாஜா ஸ்ரீ தன்வந்த்ரி பீடத்தில் கருட பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நாளை நடைபெறுகிறது. பாம்பென்றால் படையும் நடுங்கும் அதே போல பாம்பு கிரகங்களான ராகு கேது தோஷத்தினால் பலவித தடைகளும் ஏற்படுகின்றன. திருமண தடை, புத்திரபாக்கிய தடை ஏற்படுகிறது. இந்த தடைகள் நீங்க ஆடி மாதம் வளர்பிறை சுக்லபஞ்சமி திதியன்று கருட பஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

Garuda Panchami 2020 Viratham importance and benefits

கருட பஞ்சமி நாளில் விரதமிருந்து கருடனை வழிபட தோஷம் விலகி திருமணம் கைகூடும், கணவன் ஆயுள் அதிகரிக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தடைபட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்து சமயத்தில் பாம்புவுக்கும், கருடருக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது. நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். கருடன் என்று போற்றப்படும் பறவையை பட்சி ராஜா அதாவது பறவைகளின் தலைவன் என்று சொல்வார்கள். சாஸ்திர சம்பிரதாயங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஒரு விசேஷமான பறவை. பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம் சொல்லில் அடங்காது. அவருக்கென்றே 'கருடபஞ்சமி' என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கருட பஞ்சமி கர்நாடகாவில் பெண்களால் விரதம் இருந்து மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்திய ரக்சாபந்தன் போல தன் சகோதரர்களின் நலன் வேண்டிச் செய்கின்ற பண்டிகை கருடபஞ்சமி. ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும்.

பரதநாட்டியம் தெரியுமா சென்னை கலாக்ஷேத்ராவில் வேலை இருக்கு விண்ணப்பிங்கபரதநாட்டியம் தெரியுமா சென்னை கலாக்ஷேத்ராவில் வேலை இருக்கு விண்ணப்பிங்க

பெண்கள் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகி வாழ்வில் வளம் பெறலாம்.

கருடபஞ்சமி நாளான இன்று குழந்தை வரம் வேண்டியும், ஆண் பெண் திருமணம் வேண்டியும், மேலும் நற்பலன்கள் பெறவும் நாகரையும், கருடனையும் வேண்டி நடைபெற உள்ள மேற்கண்ட யாகங்களிலும் அபிஷேக ஆராதனைகளிலும் பக்தர்கள் வீட்டில் இருந்தவரே பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

இந்த யாகங்களில் நெய், தேன், விசேஷ மூலிகைகள், நவதானியங்கள், மஞ்சள், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், நவ சமித்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஸ்ரீ அஷ்ட நாக கருடருக்கு தேன் அபிஷேகமும், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு பால், மஞ்சள் தீர்த்த அபிஷேகமும் மேற்கண்ட நாட்களில் நடைபெறும்.

நாக தோஷம் நீங்குவதற்கும், பக்ஷி தோஷங்கள் அகலவும், வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், ராகு கேது கிரங்கள் மற்றும் பிற நாக தோஷங்கள் விலக வேண்டியும், திருமணம், குழந்தைப்பேறு கிடைக்க வேண்டியும், பாவங்கள், நோய்கள் அகலவும், குடும்ப நலம், தைரியம் ஏற்படவும், எதிரிகள் தொல்லை அகலவும், நீண்ட ஆயுள், பணவரவு ஏற்படவும், ஸர்ப்ப தோஷம், மரண பயங்கள், புத்தி பேதலிப்புகள், சரும வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள் விலகவும், துர் ஆவிகள் பாதிப்புக்களில் இருந்து விலகவும், இரத்த புற்று நோய், எலும்பு புற்று நோய், போன்ற பலவிதமான புற்று நோய்கள், பித்ரு, பிரம்ம ஹத்தி தோஷங்கள், பரம்பரை பரம்பரையாக வரும் பூர்வ தோஷங்கள், கால சர்ப தோஷங்கள், பில்லி, சூன்யம், ஏவல், சத்ரு தொல்லைகள், குடும்பத்தில் சுபிட்சம் உருவாகவும், பிறக்கும் குழந்தைகள் அறிவும் வீரமும் உடையவர்களாக விளங்கவும், ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும் கூட்டு பிரார்த்தனை நடைபெறும். இந்த தகவலை தன்வந்த்ரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் பொது மக்கள் யாரும் நேரில் கலந்து கொள்ள அனுமதியில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். சங்கல்பம் செய்து கொள்ள விரும்புபவர்கள் மற்றும் மேலும் தகவல் வேண்டுபவர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. இராணிப்பேட்டை மாவட்டம்.தொடர்புக்கு.04172-230033.9443330203.

English summary
Garuda panchami will celebrate on July 25th 2020. Garuda homam and special abiseham at Sri Dhanvanthri arokya peedam in Walajapet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X