For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2020 : உத்தமர் கோவில் சப்த குரு ஸ்தலத்தில் குரு பெயர்ச்சி விழா

சில ஆலயங்களில், நவக்கிரக குரு பகவான் தனிச்சந்நிதியில் காட்சி தந்தருள்வார். ஆனால் ஒரே கோயிலில், ஏழு குரு சந்நிதி அமைந்துள்ளது. குரு பெயர்ச்சி நேரத்தில் இந்த ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்து வர நன்மைகள

Google Oneindia Tamil News

திருச்சி: சிவாலயங்களில், குரு தட்சிணாமூர்த்தியை கோஷ்டத்தில் தரிசிக்கலாம். அதேபோல், நவகிரகங்களில் ஒரு கிரகமாக குரு பகவான் காட்சி தருவார். அவரையும் தரிசித்து வலம் வந்து வழிபடலாம். சில ஆலயங்களில், நவக்கிரக குரு பகவான் தனி சந்நிதியில் காட்சி தந்தருள்வார். ஆனால் ஒரே கோயிலில், ஏழு குரு சந்நிதி அமைந்துள்ளது. திருச்சி உத்தமர்கோவிலில் உள்ள சப்த குரு ஸ்தலத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.

உத்தமர் கோயிலில் சிவா, விஷ்ணு, பெருமாள் மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. இப்படி மும்மூர்த்திகளும் மூர்த்தமாக இருந்து அருளாட்சி செய்யும் இந்த தலம் சப்த குரு ஸ்தலம் ஆகும்.

Guru Peyarchi 2020: Uttamar Temple Saptha Guru Parikara stalam

தேவகுரு பிரகஸ்பதி, அசுர குரு சுக்கிராச்சார்யர், ஞான குரு ஸ்ரீசுப்ரமணியர், படைப்புக் கடவுளான ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு குருவாக ஸ்ரீவரதராஜர், சிவ குருவாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி, சக்தி குருவெனக் காட்சி தரும் ஸ்ரீசௌந்தர்ய நாயகி ஆகியோர் அனைவரும் ஒரே இடத்தில், ஒரே தலத்தில், ஏழு குருவும் ஒன்றாக இணைந்து அருள்பாலிக்கின்றனர்.

குரு பெயர்ச்சி 2020: தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சியான குரு பகவான்குரு பெயர்ச்சி 2020: தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சியான குரு பகவான்

குரு பகவானின் அதிதேவதை ஸ்ரீபிரம்மா என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமைகளில், குருவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. குருப்பெயர்ச்சியின் போது, சிறப்பு ஹோமங்களும் விசேஷ வழிபாடுகளும் நடைபெற்றன.

Guru Peyarchi 2020: Uttamar Temple Saptha Guru Parikara stalam

சப்த குருவும் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு வந்து, அவர்களைக் கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். மந்த புத்தி விலகும். காரியத் தடைகள் நீங்கும் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குரு தோஷம் நீங்கும். குரு பலத்துடன் திகழ்வீர்கள்.

Guru Peyarchi 2020: Uttamar Temple Saptha Guru Parikara stalam

சந்தோஷமான வாழ்க்கை நிச்சயம். திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் அமைந்து உள்ளது உத்தமர்கோவில் திருத்தலம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது உத்தமர்கோவில்.

English summary
In the Shiva temples, Guru Dakshinamoorthy can be seen in the gosht. Similarly, Guru Bhagavan will appear as one of the planets in the Navagrahas. You can visit him and come and worship him. In some temples, Navagraha Guru Bhagavan will appear in a private meeting. But in the same temple, there are seven Guru Sannidhi. The shrine of the seven gurus is located in the Uttamar Temple in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X