• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரு பெயர்ச்சி 2020: குரு பகவானால் புதிய வேலை,புரமோசன் யாருக்கு கிடைக்கும் தெரியுமா

|

சென்னை: நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஐப்பசி 30ஆம் தேதி, நவம்பர் 15ஆம் நாள் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ உள்ளது. இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், புரமோசன், சம்பள உயர்வு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளதால் பலரது வேலை பறிபோய்விட்டது. நிறைய பேருக்கு சம்பள குறைப்பு செய்துள்ளதால் மன அழுத்தம் கஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால்
ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ராசிகள் பலம் பெறுகின்றன.

குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம்,சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வரும் என்று நினைக்க வேண்டாம். சிறிய அளவில் பரிகாரம் செய்தால் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: நாளை கருடவாகன சேவை - டிவியில் தரிசிக்கலாம்திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: நாளை கருடவாகன சேவை - டிவியில் தரிசிக்கலாம்

மேஷம்

மேஷம்

மேஷம் ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு அற்புதமான குரு பெயர்ச்சியாக உள்ளது. பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். வீண் தர்க்கம் வேண்டாம். நரம்பு தொடர்பான பிரச்சினை வரலாம். குரு பெயர்ச்சி திருக்கடையூர், திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கவும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. படிப்பில் இருந்த தடை, வேலையில் இருந்த தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் ஒன்றிணைவார்கள். திருமண முறிவு ஏற்பட்டவர்களுக்கு மறு திருமணம் நடைபெறும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். சுப விரைய செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். தாய் வழி உறவு தந்தை வழி உறவில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் நீங்கும். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் குருவின் அனுகிரகத்தினால் பாதிப்புகள் நீங்கும். தென் திட்டை குருபகவானை தரிசனம் செய்யலாம். குல தெய்வ தரிசனம் குழப்பத்தை தீர்க்கும்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். பயணங்களால் நன்மைகள் நடைபேறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
குடும்ப விசயத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குடும்ப விசயத்தில் அடுத்தவர்களை தலையிட விட வேண்டாம். சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்தால் சங்கடங்கள் நீங்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் தொடங்குவீர்கள். வீட்டில் சுப விரையங்கள் ஏற்படும். சுப காரியங்கள் கை கூடி வரும். அண்ணன் தம்பிகள் சகோதர சகோதரிகளிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். அரசியல்வாதிகளுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் பிள்ளையார்பட்டி விநாயகப்பெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

குரு பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். கவுரவங்கள் நன்மைகள் நடைபெறும். வீடு மாற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனை வணங்கவும். கர்ப்பிணி பெண்கள் கவனத்தோடு இருப்பது நல்லது.

English summary
Guru Peyarchi the grace of God is necessary to get a good job and a pay rise. The Guru shift is scheduled for November 15, the 30th day of the aippasi, which is according to the Guru Bhagavan's . According to the Thirukkanitha Panchanga, Karthika 5th is scheduled to take place on Friday, November 20. With this Guru shift we can see which astrologers will get good job, promotion, salary increase.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X