For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Mothers day முழு மதி போல முக மலர்ச்சியோடு இருக்கும் அம்மா

சந்திரன் மனோகாரகன். ஜோதிடத்தில் சந்திரனுக்கும் அம்மாவிற்கும் உள்ள தொடர்பு, பிள்ளைகளுக்கும் அம்மாவிற்கும் ஏற்படும் உறவு பற்றியும் அம்மாவின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்களையும் ப

Google Oneindia Tamil News

சென்னை: நமக்காக இரவும் பகலும் உழைக்கும் அம்மாவிற்கு நாம் தினந்தோறும் விழா எடுக்கலாம். அதை விடுத்து மே மாதம் 2வது ஞாயிறு அன்று ஒரு நாள் மட்டுமே அன்னையர் தினம் கொண்டாடி வருவது நியாயமே இல்லை. சூரியனிடம் இருந்து சந்தின் வெளிச்சத்தை பெறுவதைப்போல அம்மாவிற்கு ஆதாரம் அப்பாதான் என்றாலும் தன் ஒவ்வொரு விநாடியும் பிள்ளைகளுக்காக மட்டுமே வாழ்வது அம்மா மட்டுமே. சூரியனை போல சுட்டெரிப்பதில்லை. முழு மதிபோல தன் குளுமையை மட்டுமே தருபவர் அம்மா. இரவும் பகலும் பிள்ளைகளின் நலனைப்பற்றி மட்டுமே நினைக்கும் அம்மாவின் ஆரோக்கியம் நன்றாக இருக்க ஜோதிட ரீதியாக சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

நவகிரக நாயகர்களில் ஒருவரான சந்திரன் மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாக கூறுகின்றனர். காலபுருஷனுக்கு 4வது வீடான கடகம் சந்திரனுக்கு ஆட்சி வீடு. ரிஷபத்தில் உச்சமடையும் சந்திரன், விருச்சிகத்தில் நீசமடைகிறார். சந்திரனுக்கும் அம்மாவிற்கும், 4வது வீட்டிற்கும், அம்மாவிற்கும் உள்ள தொடர்பு இதன் மூலம் அறியலாம்.

தாய்மை எனப்படுவது யாதெனில்!தாய்மை எனப்படுவது யாதெனில்!

ஜாதகத்தில் நான்காம் வீடு மூலம் தாயார், தாய்வழி உறவுகள், உறவுகளுடன் உள்ள பந்தபாசம் பற்றி அறியலாம். அதே போல நான்காம் வீட்டில் அமர்ந்துள்ள கிரகங்கள், பார்க்கும் கிரகங்களைப் பொறுத்து தாயின் உடல்நிலை, உறவு நிலை எப்படி அமையும் என்று பார்க்கலாம். இந்த பாவம் கெட்டால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரலாம். அம்மாவின் ஆரோக்கியம் காக்க பிள்ளைகள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

அம்மாவும் சந்திரனும்

அம்மாவும் சந்திரனும்

ஒரு குழந்தை வளர்ந்து ஆளாகின்ற வரை, அதாவது பதினான்கு வயது வரை தாய் முக்கியம். ஒருவரது தாயாரின் உறவு மற்றும் நிலை நன்றாக அமைய வேண்டுமானால் ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருக்க வேண்டும். சந்திரன் பகை வீட்டிலோ அல்லது பாவிகளுடனோ 6,8,12 ஆமதிபதிகளுடனோ தொடர்பில் இருக்கக்கூடாது. சந்திரன் நீசமடைந்திருக்கக்கூடாது. அப்படி நீசமடைந்தாலும் நீசம் பங்கமடைந்திருக்க வேண்டியது அவசியம்.

அம்மாவிற்கு பாதிப்பு

அம்மாவிற்கு பாதிப்பு

ஒருவரின் குழந்தைப் பருவம் எந்த பிரச்சினையும் இன்றி நன்றாக இருக்க வேண்டும் என்றால் நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும். லக்னத்திற்கு நான்காம் பாவதிபதி பாவிகள் மற்றும் 6,8,12 அதிபதிகள் பார்வை சேர்க்கை இல்லாமல் அமைந்திருக்க வேண்டும். ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் நான்காம் வீட்டில் சந்திரன் இருக்க, அந்த வீட்டைத் தீய கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் தன் தாயைச் சின்ன வயதில் பறிகொடுக்க நேரிடும்.

மாத்ரு தோஷம்

மாத்ரு தோஷம்

அம்மாவிற்கு பிள்ளைகள் மீது கோபம் வரவே வராது. யாரிடமும் தனது பிள்ளைகளை விட்டுக்கொடுக்க மாட்டாள். பிள்ளைகள் கெட்டுப்போகும்படி சாபமிடமாட்டார். அதே நேரத்தில் அம்மாவின் பிள்ளை மனம் நோகும்படி செயல்கள் செய்தால் அது மாத்ரு தோஷமாகிறது. மாத்ரு தோஷத்திற்க்கு முதன்மையான பரிகாரம் தாய் உயிருடன் இருக்கும்வரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். இறந்தபின் பித்ரு கடன்களை சரிவர செய்ய வேண்டும்.

திருப்பதி திருப்பம்

திருப்பதி திருப்பம்

அம்மா எப்போதுமே முழு நிலவு போல பிரகாசமாக இருப்பார். தன் ஒளி முழுவதையும் பிள்ளைகளுக்காகவே கொடுப்பார். சந்திரன் தலங்களில் தரிசனம் செய்து பரிகாரம் செய்தால் அம்மாவின் ஆரோக்கியம் அதிகரிக்கும். இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி. சந்திரனின் சக்தி மிகுந்த கோயில். மனதிற்கு நிம்மதி தரும் கோவில். அம்மாவிற்கு ஏதோனும் பாதிப்பு வந்தால் திருப்பதி ஏழுமலையான வணங்கலாம். அம்மா உடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும். இந்த ஊராடங்கு காலத்தில் அம்மா உடன் திருப்பதி ஏழுமலையான நினைத்து வணங்கலாம்.

English summary
Our mothers are the light of our lives and they deserve special treatment for being the powerhouses they are.The mother is the only one who lives for her children every single second, even though the mother's source is not as bright as the moon's light from the sun. Does not burn like the sun. Mother is the only one who gives her cool as a whole. Astrologically, some remedy must be done for the health of the mother, who only cares about her children day and night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X