For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லவ் புரபோஸ் பண்ணப்போறீங்களா? எந்த ஹோரையில் சொன்னா சக்சஸ் ஆகும் தெரியுமா

நவ கிரகங்களில் ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு,சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்கள் 24 மணிநேரத்தை ஆட்சி செய்கின்றன. ராகு கேதுவிற்கு ராகு காலம் எமகண்ட காலம் இருப்பது போல ஒவ்வொரு கி

Google Oneindia Tamil News

சென்னை: எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்பாகவும் ஹோரை பார்த்து தொடங்க வேண்டும் என்று கூறுவார்கள். காதலை சொல்லவும் ஹோரை உள்ளது எந்த ஹோரையில் காதலை சொன்னால் வெற்றிகரமாக முடியும் என்று பார்த்து லவ் புரபோஸ் பண்ணுங்க அந்த லவ் சக்சஸ் ஆகும்.

ராகு கேது கிரகங்களுக்கு ராகு காலம், எமகண்டம் என தினசரியும் உள்ளது போல நவ கிரகங்களில் ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு,சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்கள் 24 மணிநேரத்தை ஆட்சி செய்கின்றன. ஏழு கிரகங்களுக்கும் தினமும் சில மணிநேரங்கள் தங்களுடைய கதிர்வீச்சை செலுத்துவதாக ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனையே ஹோரை என்கின்றனர்.

ஜூன் மாதம் ராசி பலன் 2020 - மிதுனத்திற்கு பிரச்சினையில்லை.. கடகம் ரொம்ப கவனம்ஜூன் மாதம் ராசி பலன் 2020 - மிதுனத்திற்கு பிரச்சினையில்லை.. கடகம் ரொம்ப கவனம்

சூரிய உதயத்தில் இருந்து ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமை நேரமாக உள்ளது. உதாரணமாக ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்குரிய நாள். இந்த நாளில் சூரிய உதயத்தின் முதல் ஒரு மணி நேரத்தை சூரியனின் ஹோரை என்று கணக்கிட்டு அதன் பிறகு அடுத்து வருகின்ற ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு கிரகத்திற்கு என்று ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என ஒவ்வொரு ஹோரையாக வரும். மீண்டும் அதே வரிசையில் சூரியனில் இருந்து தொடங்கும்.

எந்த நாளுக்கு என்ன ஹோரை நல்லது

எந்த நாளுக்கு என்ன ஹோரை நல்லது

ஒவ்வொரு கிழமைகளிலும் சில வெற்றி தரும் கிரக ஹோரைகள் உள்ளன. அதன் படி ஞாயிறுகிழமை சூரியன், குரு, புதன் சந்திரன் சுப ஹோரையாக அமைந்துள்ளது. திங்கள் கிழமை சந்திரன், குரு, சூரியன் ஹோரைகளில் நல்ல காரியம் செய்யலாம். செவ்வாய் கிழமை குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன் ஹோரைகள் நன்மை செய்யும். புதன் புதன், சுக்கிரன், சூரியன் ஹோரைகள் நல்லது செய்யும். வியாழன் குரு, சந்திரன், சூரியன் ஹோரைகள் நல்லது செய்யும். வெள்ளிக்கிழமை சுக்கிரன், புதன் ஹோரைகளும், சனிக்கிழமை குரு, சுக்கிரன், புதன் ஹோரைகளும் நன்மை செய்யக்கூடியவையே. அதே நேரத்தில் ஞாயிற்றுக் கிழமை சனி, செவ்வாய் ஹோரை, சனிக்கிழமையில் சூரிய, செவ்வாய் ஹோரைகள், செவ்வாய்க்கிழமையில் சனி ஹோரை, புதன் கிழமையில் குரு ஹோரை ஆகியவை அனுபவத்தில் பல சிரமங்களைத் தருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

அரசு வேலை அப்ளிகேசன்

அரசு வேலை அப்ளிகேசன்

சூரிய ஹோரையில் அரசாங்க விஷயங்களை ஆரம்பிக்கலாம். அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். கான்ட்ராக்ட், டெண்டர், வழக்கு சம்பந்தமாக பேசலாம். பூர்வீக சொத்து பரம்பரை சொத்து சம்பந்தமாக பேசலாம். அப்பாவிடம் உதவி கேட்கலாம். உயில் சாசனங்களில் கையெழுத்திடலாம். சொத்து சம்பந்தமான பத்திரங்களை பார்க்கலாம். கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாம்.
சூரிய ஹோரையில் சொந்த வீட்டில் கிரகப் பிரவேசம் செய்வது நன்மை தந்தாலும் இந்த ஹோரையில் பால் காய்ச்சக்கூடாது, வாடகை வீட்டிற்கும் அதுவே. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடாது.

காதலை சொல்லும் ஹோரை

காதலை சொல்லும் ஹோரை

சந்திர ஹோரையில் புதிய தொழில், வியாபாரம் தொடங்கலாம் காய், கனி, பூ, தண்ணீர், அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை செய்யலாம். வங்கியில் கணக்கு தொடங்கலாம். காதலை வெளிப்படுத்தலாம். பெண் பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம். தாயாரின் உதவியைப் பெற நாடலாம். பயணங்களைத் தொடங்கலாம். பெண்களின் உதவியை நாடலாம். அம்பாள், அம்மன் தலங்களுக்கு சென்று வழிபடலாம். பொதுவாக தேய்பிறை சந்திர ஹோரையை எல்லா விஷயங்களுக்கும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பாஸ்போர்ட், விசா, வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த முயற்சிகளும் செய்யக்கூடாது.

பெண் பார்க்க போகாதீங்க

பெண் பார்க்க போகாதீங்க

செவ்வாய் ஹோரையில் சகோதரர்கள், பங்காளிகளின் பிரச்னைகளை பேசலாம். சொத்து வாங்குவது, விற்பது பற்றி பேசலாம், அது சம்பந்தமாக ஒப்பந்தங்கள் போடலாம். முதன் முதலில் வாங்கும் இடத்தை சென்று பார்வையிடலாம். சகோதர உறவுகளின் உதவியை நாடலாம். வாங்கிய கடனை அடைக்கலாம். அதே நேரத்தில் செவ்வாய் ஹோரையில் விவாதங்கள் செய்யக் கூடாது. வழக்கு சம்பந்தமாக பேசக் கூடாது. கடன் வசூல் செய்யப் போகக் கூடாது. பெண் பார்க்க போகக் கூடாது.

படிக்க அப்ளிகேசன் போடுங்க

படிக்க அப்ளிகேசன் போடுங்க

புதன் ஹோரையில் கல்வி சம்பந்தமாக எல்லா விஷயங்களையும் செய்யலாம். ஜாதகம் பார்க்கலாம். வங்கியில் புது கணக்கு தொடங்கலாம். மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம். வக்கீல்களைப் போய்ப் பார்க்கலாம். கம்ப்யூட்டர் வாங்கலாம். செல்போன் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம். நல்ல விஷயங்களுக்காக தூது போகலாம். பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம். அதே நேரத்தில் புதன் ஹோரையில் பெண் பார்க்க போகக் கூடாது. வீடு, நிலம் பற்றி பேசக் கூடாது. சொத்துக்களை பார்வையிடக் கூடாது.

நகை வாங்க ஏற்ற ஹோரை

நகை வாங்க ஏற்ற ஹோரை

குரு ஹோரையில் எல்லா நல்ல காரியங்களும் செய்ய ஏற்ற ஹோரை. பொன் நகைகளை வாங்கலாம். புதுமணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம். வங்கியில் பிச்சட் டெபாசிட் செய்யலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம். கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்ளலாம். யாகங்கள், ஹோமங்கள் செய்வதற்கான பொருட்களை வாங்கலாம். அதே நேரம் இந்த ஹோரையில் முதன் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்கக்கூடாது. புதுமணத் தம்பதிகளுக்கும் விருந்து, உபசாரம் செய்யக்கூடாது.

லவ் சக்சஸ் ஆகும்

லவ் சக்சஸ் ஆகும்

சுக்கிரன் ஹோரை பெண் பார்க்கும் சம்பிரதாயத்துக்கு மிகச் சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிப்படுத்தலாம். வெள்ளிப் பொருட்கள், வைர ஆபணரங்கள் வாங்கலாம். விருந்து வைக்கலாம். வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம். சொத்து விஷயங்கள் பேசலாம். கணவன், மனைவியிடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். பெண்களின் குழந்தையை உதவியை நாடலாம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேரலாம். அம்பாள், ஆண்டாள், அம்மன் தலங்களுக்குச் சென்று வணங்கலாம். அதே நேரம் இந்த ஹோரையில் நகை இரவல் தரக் கூடாது. கடன் கொடுக்கக் கூடாது. குடும்பப் பிரச்னைகளை விவாதிக்கக் கூடாது. துக்கம் விசாரிக்கக் கூடாது.

கடன் அடைக்க நல்ல ஹோரை

கடன் அடைக்க நல்ல ஹோரை

சனி ஹோரையில் சொத்து சம்பந்தமாக பேசலாம். இரும்பு சாமான்கள், பீரோ, வண்டி ஆகியவை வாங்கலாம். மரக்கன்றுகள் நடலாம். நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம். வாங்கிய கடனை அடைக்கலாம். பிரசித்தி பெற்ற தலங்களுக்குச் சென்று வரலாம்.
அதே நேரத்தில் இந்த ஹோரையில் நோய்க்கு முதன் முதலாக மருந்து உண்ணக் கூடாது. மருத்துவரை சந்திக்கக் கூடாது. பிரயாணம் புறப்படக் கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடாது. முதன் முதலாக பிறந்த குழந்தையை போய்ப் பார்க்கக் கூடாது. துக்கம் விசாரிக்க செல்லக் கூடாது.

English summary
Hora also means time. According to vedic astrology,hora is the duration between Sunrise to next sunrise. Hora is considered as the important part of astrology. When there is no availability of any auspicious Muhurat for a specific work, the management of Hora Chakra is given in vedic astrology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X