For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ண ஜெயந்தி 2020: அஷ்டமி திதியில் அவதரித்த கண்ணன் - எப்படி வணங்க வேண்டும் தெரியுமா

அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. சில ஆண்டுகளில் ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடி மாதம் அஷ்டமி திதியில் கிருஷ்ண ஜெ

Google Oneindia Tamil News

சென்னை: ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார் என்கிறது புராணம். இந்த ஆண்டு ஆடி மாதமே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி நாளை தமிழகத்திலும், வட இந்தியாவில் மறுநாள் ஆகஸ்ட் 12ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கப்பட நாளைய தினம் செவ்வாய்கிழமை ஆடி 27ஆம் தேதி ஆகஸ்ட் 11ஆம் நாள் காலை 09.07 மணிக்கு அஷ்டமி திதி தொடங்குகிறது. மறுநாள் ஆகஸ்ட் 12 புதன்கிழமை பகல் 11.17 மணிவரை அஷ்டமி திதி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த ஆண்டு கோவிலுக்கு போக முடியாவிட்டாலும் வீட்டிலேயே அழகாக கொண்டாடலாம். நமது வீட்டிற்கு குழந்தை கண்ணனை வரவேற்க சில விரதமுறைகளையும் பூஜை முறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

பாமக ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும்... அன்புமணி ராமதாஸ் போடும் புதுக் கணக்குபாமக ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும்... அன்புமணி ராமதாஸ் போடும் புதுக் கணக்கு

கிருஷ்ணருக்கு வரவேற்பு

கிருஷ்ணருக்கு வரவேற்பு

நம்முடைய வீட்டில் பகவான் கிருஷ்ணரை வணங்க நாம் சில முறைகளை கடைபிடிக்க வேண்டும். காலையிலேயே எழுந்து குளித்து விட்டு வீட்டை சுத்தம் செய்து கிருஷ்ணர் பாதம் வரைய வேண்டும். கிருஷ்ணரை வரவேற்க பாத கோலம் போட வேண்டும்.

குழந்தை கிருஷ்ணர் வழிபாடு

குழந்தை கிருஷ்ணர் வழிபாடு

நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணரை போல அலங்கரிக்க வேண்டும். பெண் குழந்தைகள் இருந்தால் ராதை போல அலங்கரிக்கலாம். மாலையில் பூஜை அறையில் தோரணங்கள் கட்டி அலங்கரித்து கிருஷ்ணர் சிலை அல்லது படம் வைத்து பலகாரங்களை படைக்க வேண்டும்.

முருக்கு சீடை

முருக்கு சீடை

கிருஷ்ணருக்கு பிடித்தமானது வெண்ணெய், அவல், கூடவே இனிப்பு சீடை, முருக்கு, தட்டை, பணியாரம் போன்றவை ரொம்ப பிடிக்கும். வீட்டில் செய்ய முடியாவிட்டாலும் கடையில் வாங்கியாவது படைத்து சாமி கும்பிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

கிருஷ்ணருக்கு பிடித்த அவல்

கிருஷ்ணருக்கு பிடித்த அவல்

எந்த பலகாரம் வைத்து சாமி கும்பிட முடியாவிட்டாலும் எளிமையாக வெண்ணெயும், அவலும் படைத்து வணங்க மனதார ஏற்றுக்கொண்டு செல்வ வளத்தை அள்ளித்தருவார் பகவான் கிருஷ்ணர்.

கிருஷ்ண லீலை, ஸ்ரீபாகவத புராணம் படிக்கலாம். கிருஷ்ண மந்திரம் படித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்து வணங்கினால் சந்தான யோகம், புத்திர பாக்கியம் கிடைக்கும். நம் வீட்டில் உள்ள குழந்தைகள் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று ஸ்ரீமத் பாகவதமும், விரத சூடாமணியும் கூறியுள்ளது.

பூஜைகள் செய்ய நல்ல நேரம்

பூஜைகள் செய்ய நல்ல நேரம்

சின்னக் கண்ணனை வீட்டிற்கு அழைக்க காலை மாலை என எந்த நேரமும் நல்ல நேரம்தான். ராகு காலம், எம கண்டம் நேரம் தவிர எந்த நேரத்திலும் வணங்கலாம்.

நாளைய தினம் நல்ல நேரம்

நாளைய தினம் நல்ல நேரம்

காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை உள்ளது இந்த நேரங்களில் வீட்டில் பூஜை செய்து வணங்கலாம்.

English summary
Janmashtami around the world in 2020 : Krishna jayanthi When Celebration in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X