
ஆனி திருமஞ்சனம்..ஆடி அமாவாசை.. ஜூலை மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் தெரியுமா?
சென்னை: ஆனிமாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் மிதுன ராசியிலும் கடக ராசியிலும் பயணம் செய்கிறார். ஆனி மாதத்தில் நடராஜருக்கு திருமஞ்சனமும் ஆடி மாத அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
ஜூலை மாதத்தில் பல முக்கிய விஷேச தினங்களும், முகூர்த்த நாட்களும் உள்ளன. காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி மாங்கனித் திருவிழா நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடைகூடையாக வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்துகொண்டு மாம்பழங்களை சூறைவிடுவார்கள்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஜூலை மாதத்தில் எந்த நாட்களில் முக்கிய விஷேச நாட்கள் உள்ளன. பண்டிகை நாட்களைப் பற்றி பார்க்கலாம்.
ஜூலை மாதம் முக்கிய பண்டிகை நாட்கள்
03 ஞாயிறு சதுர்த்தி விரதம் விநாயகருக்கு ஏற்ற விரத நாள்
05 செவ்வாய்கிழமை சஷ்டி விரதம். முருகனுக்கு விரதம் இருக்க காரிய வெற்றி உண்டாகும்.
06 புதன் கிழமை ஆனி உத்திரம் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம். இன்று ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் தரிசனம் செய்தால் தொழில் போட்டியில் தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.
10 ஞாயிறுக்கிழமை ஏகாதசி விரதம்
11 திங்கட்கிழமை சோம பிரதோஷம் தம்பதி சமேதராக சிவ ஆலயம் சென்று வழிபட கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஜேஷ்டாபிஷேகம். ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் ஆனி கேட்டையில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.
13 புதன்கிழமை பௌர்ணமி விரதம் , பௌர்ணமி , வியாச பூஜை. குரு பூர்ணிமா இன்று ஆசிரியர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம் குருபூஜை செய்யலாம். காரைக்காலில் மாங்கனித்திருவிழா நடைபெறும்.
15 வெள்ளிக்கிழமை சிரவண விரதம்
16 சனிக்கிழமை கடக சங்கராந்தி , சங்கடஹர சதுர்த்தி விரதம்
17 ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத பிறப்பு தட்சிணாயன புண்யகாலம் , சபரிமலையில் நடை திறப்பு
21 வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி நீலகண்ட அஷ்டமி
23 சனிக்கிழமை ஆடி கிருத்திகை. ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு ஏற்ற நட்சத்திரம்.
24 ஞாயிற்றுக்கிழமை யோகினி ஏகாதசி விரதம்
25 திங்கட்கிழமை சோம பிரதோஷம். திங்கட்கிழமை சோமவார பிரதோஷம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பெருக சிவ ஆலயம் சென்று வணங்கலாம்.
26 செவ்வாய்கிழமை மாத சிவராத்திரி
27 புதன்கிழமை வாஸ்து நாள். வீடு கட்ட வாஸ்து செய்ய ஏற்ற நல்ல நாள்.
28 வியாழக்கிழமை ஆடி அமாவாசை. தட்சிணயன புண்ணிய காலத்தில் வரும் அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டிற்கு ஏற்ற நாள்.
29 வெள்ளிக்கிழமை ஆஷாட நவராத்திரி
30 சனிக்கிழமை சந்திர தரிசனம்