For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திகை அமாவாசை நாளில் 108 சுமங்கலி பூஜை - காலத்தை வெல்லும் கருங்காலி யாகம்

கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு மஹாலக்ஷ்மி யாகம், சூலினி ப்ரத்யங்கிரா யாகம் மகா காளி யாகம் நடை நடைபெற உள்ளது. காலத்தை வெல்லும் கருங்காலி யாகம் நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

இராணிப்பேட்டை: கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் மஹாலக்ஷ்மி யாகம், சூலினி ப்ரத்யங்கிரா யாகம் மகா காளி யாகம் நடை நடைபெற உள்ளது. காலத்தை வெல்லும் கருங்காலி யாகம் மந்திர,யந்திர,தந்திர, விஷசூர்ண,அபிசார தோஷங்கள் நீங்கி மங்களங்கள் ஏற்பட மகா காளியாகம் நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் 14.12.2020 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை 108 சுமங்கலி பூஜை நடைபெற உள்ளது.

Karthigai Amavasai special yagam at dhanvantri Peedam

மாங்கல்ய பலம் வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமை வேண்டியும் நடைபெறும் சுமங்கலி பூஜையில் பங்கேற்க சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி தைல பிரசாதம் வழங்குகிறார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற உள்ளது.

மஹாலக்ஷ்மி யாகம்,அமாவாசை முன்னிட்டு சூலினி ப்ரத்யங்கிரா யாகம் மகா காளி யாகம் நடை நடைபெற உள்ளது. காலத்தை வெல்லும் கருங்காலி யாகம் மந்திர,யந்திர,தந்திர, விஷசூர்ண,அபிசார தோஷங்கள் நீங்கி மங்களங்கள் ஏற்பட மகா காளியாகம் நடைபெறுகிறது.

இந்த யாகத்தில் கருங்காலி,வெண்கடுகு,நாயுருவி தேவதாரு,வால்மிளகு,கடுகு வலம்புரி,இடம்புரி, மஞ்சள் கிழங்கு,சாம்பிராணி,குங்குலியம் போன்ற விஷேச திரவியங்கள் கொண்டு வருகிற 14.12.2020.திங்கள் கிழமை மாலை 3.00 மணி முதல் 7.00 மணி வரை அமாவாசையில் உலக நன்மை வேண்டி வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நடை பெறுகிறது. இதனை தொடர்ந்து 64 கிலோ மஞ்சள் 64 கிலோ குங்குமம் கொண்டு பஞ்ச முகவராஹி தேவிக்கும் மஹிஷாசுரமர்த்தினி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

கன்னிசாமிகளும் சரங்குத்தியும் - சபரிமலை யாத்திரையின் சடங்குகள்கன்னிசாமிகளும் சரங்குத்தியும் - சபரிமலை யாத்திரையின் சடங்குகள்

டிசம்பர் 15ஆம் தேதி செவ்வாய்கிழiம சுதர்சனர் ஹோமம், மஹா தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு தைலாபிஷேக பூர்த்தி விழா நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து உடல் பிணி, மன பிணி நீங்க 17 ஆம் ஆண்டு தைலகாப்பு திருமஞ்சனம் தன்வந்திரி மூலவருக்கு சென்ற மாதம் 29.11.2020 முதல் இன்று 15.12.2020 செவ்வாய்கிழமை நிறைவு பெறுகிறது. 108 கலசாபிஷேகம் நடைபெற உள்ளது. 108 கலசங்களில் 108 மூலிகைகள் கலந்த தீர்த்தங்களால் மூலவர் தன்வந்த்ரி பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் நடைபெற்று பலவகை புஷ்பங்கள் கொண்டு சஹஸ்ர நாம அர்ச்சனையும் ஸ்வாமி புறப்பாடு நடைபெறுகிறது. ஆலய தரிசனத்திற்கும் தொடர்பு கொள்ள 94433 30203.

English summary
Mahalakshmi Yagya, Sulini Pradyangira Yagya and Maha Kali Yagya will be performed at the Dhanavandri Peedam on the eve of the Karthika New Moon day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X