For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நாளை திருக்கல்யாணம் - இறைவனை விட்டு பிரியாத பிரியாவிடை அம்மன்

கணவனை விட்டு ஒரு கணமும் பிரியக்கூடாது என்று மனிதர்கள் மட்டுமல்ல தெய்வமும் நினைப்பது தெரியுமா? மதுரை மீனாட்சி அம்மன் தனது கணவர் சொக்கநாதரை விட்டு ஒரு கணமும் பிரியமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரியாவி

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. காலை 9.05 மணி முதல் காலை 9.29 மணிக்கு நடைபெற உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரடியாக பார்க்க முடியலையே என்ற கவலை பக்தர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. நேரடியாக கோவிலுக்கு சென்று மீனாட்சி திருக்கல்யாணத்தை காண முடியாவிட்டாலும் கோவில் இணையதளத்திலும் யுடுயூப் சேனலில் நேரடியாக பார்க்கலாம். மதுரை மீனாட்சி அம்மன் தனது கணவர் சொக்கநாதரை விட்டு ஒரு கணமும் பிரியமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரியாவிடைஅம்மனாக கூடவே வலம் வருகிறார் என்பதுதான் சிறப்பு.

Recommended Video

    மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது

    பூலோக கயிலாயம் என்று போற்றப்படும் நகரம் மதுரை. 2500 ஆண்டுகள் பழமையான மதுரை முந்தைய காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் கடம்ப வனம் என்றும் மருத மரங்கள் அதிக அளவில் இருந்ததால் மருதை என்றும் அழைக்கப்பட்டதாகவும், பின் காலப்போக்கில் மருதை மதுரையாக திரிந்ததாகவும் கூறுகின்றனர். அனைவரும் இங்கு கூடி இலக்கியப் பூர்வமான கலந்துரையாடல் செய்ததால் இதற்கு கூடல் நகர் என்ற பெயரும் உருவானதாக கூறப்படுகிறது. கோட்டையின் நான்கு வாயில்களிலும் நதிகள் சங்கமிப்பதால் நான்மாடக்கூடல் என்ற பழமையான பெருமை மிகுந்த பெயரும் உண்டு. நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர் என்பதால் இதற்கு ஆலவாய் என்ற ஒரு பெயரும் உண்டு. இந்த ஆலவாய் எனும் பெயர் வர புராண கதையும் உள்ளதாக கூறப்படுகிறது.

    மதுரை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். பிரம்மாண்டமான இந்த கோவிலுக்கு நம் நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் வந்து அன்னையை தரிசனம் செய்து செல்கின்றனர். பாண்டிய மன்னர்களால் முதலில் மதுரையில் கட்டப்பட்ட கோயில் இது. பின் இஸ்லாமிய படையெடுப்பினால் இந்த கோயில் அழிந்து போய் மீண்டும் 15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியில் மீண்டும் புத்துயிர் பெற்று இன்று புதுப்பொலிவுடன் தமிழரின் கட்டிடக் கலையின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைத்துள்ளது. சக்தியின் வடிவமான மீனாட்சி அம்மன் பிறந்து வளர்ந்து ஆட்சி செய்து தெய்வமான இடமாகவும் கருதப்படும் நகர் மதுரை. முக்கிய சக்தி தலமாக விளங்குகிறது மதுரை.

    மீனாட்சி திருக்கல்யாணம்

    மீனாட்சி திருக்கல்யாணம்

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 12 தமிழ் மாதங்களிலும் திருவிழா நடைபெற்றாலும் சித்திரை மாதம் நடைபெறும் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் பிரசித்தி பெற்றது. சித்திரை பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கி இந்திரன் சாப விமோசனம் பெற்ற திருவிளையாடற்புராண நிகழ்ச்சி வரைக்கும் 12 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் லாக் டவுனால் மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் நாளை காலை நடைபெறுகிறது.

    மதுரையில் மீனாட்சி ஆட்சி

    மதுரையில் மீனாட்சி ஆட்சி

    பாண்டிய மன்னர்களின் கொடி மீன். பாண்டிய மன்னர்களையும் பாண்டிய நாட்டையும் காக்கும் குல தெய்வம் மதுரையை அரசாளும் மீனாட்சி. சித்திரை மாதம் முதல் மீனாட்சி ஆட்சி தொடங்குகிறது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது எத்தனையோ தங்கம் வைரம் நகைகளை அணிவித்தாலும் வேப்பம்பூ மாலையை சூட்டுவார்கள். பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலை சூடுபவர்கள். காலம் காலமாக இதனை பின்பற்றியே இப்போதும் சித்திரை மாதத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் போது பல வேப்பம்பூ சூடுகின்றனர்.

    தேவாதி தேவர்களும் வரும் திருக்கல்யாணம்

    தேவாதி தேவர்களும் வரும் திருக்கல்யாணம்

    மதுரை மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நாளை நடைபெறுகிறது. மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணத்தை பார்க்க தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வருவது சிறப்பு. திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தேவசேனா உடனும் பவளக்கனிவாய் பெருமாளும் வந்து திருக்கல்யாணத்தை பார்க்க வாருவாங்க. வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷிகளும் வந்து கண்ணார தரிசனம் செய்வாங்க. இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும் ஆன்லைனில் ஒளிபரப்பாகும் மீனாட்சி திருக்கல்யாணத்தை யுடுயூப்பில் பார்த்து பெண்கள் தாலி மாற்றிக்கொள்ளலாம்.

    சொக்கநாதருடன் இணைபிரியாத மீனாட்சி

    சொக்கநாதருடன் இணைபிரியாத மீனாட்சி

    ஒவ்வொரு வருடமும் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியா விடை என்ற அம்மனும் வலம் வருவார். அந்த அம்மன் சுந்தரேஸ்வரரை விட்டு ஒரு கணமும் பிரியாத அம்மன் அதனால்தான் அந்த அம்மனுக்கு பெயர் பிரியாவிடை என்ற பெயர் வந்தது. மீனாட்சி அம்மனுக்கு பட்டத்தரசியாக மக்களை காக்கும் பொறுப்பு நிறைய இருக்கு. அதே நேரத்தில தன்னுடைய கணவரையும் பாதுகாக்கனும் இல்லையா? கணவனின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான் பிரியாவிடை அன்னையாக காட்சி தருகிறாள் மீனாட்சி. ஆட்சியையும் மக்களையும் கவனிக்கும் தன்னால் கணவனை கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை மீனாட்சி அம்மனுக்கு வந்திருக்கிறது அதனால்தான் பிரியாவிடை உருவத்தில் சொக்கநாதருடன் கூடவே உற்சவ அன்னையாக பிரியாவிடை நாயகியாக வலம் வருகிறாள் என்பதுதான் சிறப்பு.

    English summary
    This is the Story for Madurai Meenakshi Amman Sundreswarar and Priyavidai Amman madurai chithirai thiruvizha 2020 special
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X