For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாளய அமாவாசை நாளில் பக்தர்கள் திதி தர்ப்பணம் கொடுக்க தடை

மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டமாக வந்து திதி தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், வேதாரண்யம் கடற்கரையில் திதி கொடுக்கவும். சாமி தரிசனம் செய்யவும் தடை

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை உட்பட நீர்நிலைகளுக்கு திதி கொடுக்க பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாளய அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அன்று மட்டும் கோவில் திறக்கப்படாது மக்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் 30.09.2020 நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Mahalaya Amavasaya: Devotees in Srirangam and Vedaranyam are not allowed to Tithi

நாளைய தினம் வியாழக்கிழமை மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, வடக்கு வாசல் கொள்ளிடம் ஆறு, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஒடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் மகாளய அமாவாசையை முன்னிட்டு மேற்படி நீர்நிலைகளுக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை கடைப்பிடித்து திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தடை உத்தரவை மீறி நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல மகாளய அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . அன்று மட்டும் கோவில் திறக்கப்படாது மக்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Purattasi Viratham: புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் என்னென்ன விரதம் இருக்கு தெரியுமா ?Purattasi Viratham: புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் என்னென்ன விரதம் இருக்கு தெரியுமா ?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் மகாளய அமாவாசை அன்று கோடியக்கரை கடலில் புனித நீராடி பின்னர் வேதாரண்யேஸ்வரர் கோவில் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கோயில் அருகே உள்ள கடலிலும் கோயில் தீர்த்த குளத்தில் புனித நீராடி செல்வார்கள்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக வருகின்ற 17 ஆம் தேதி நடைபெற உள்ள அமாவாசை தினத்தன்று கோயில் திறக்கப்பட மாட்டாது என்றும் அன்று பக்தர்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
In Trichy, the public has been banned from paying homage to water bodies, including the Srirangam Ammamandapam Staircase, on the eve of the Mahalaya Amavasai. Devotees have been denied entry to the Vedaranyaswarar Temple on the eve of the Mahalaya Amavasai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X