For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய தடை - வெறிச்சோடிய புனித நீர் நிலைகள்

மகாளய அமாவசையை முன்னிட்டு இன்று முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் சடங்குகள் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தர்பணம் செய்ய வந்தவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: பாபநாசம் தாமிரபரணி ஆறு, கன்னியாகுமரி கடற்கரையில் குளிக்கவும், தர்ப்பணம் கொடுக்கவும் தடை உள்ளதால் தடையை மீறி தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். அமாவாசை நாட்களில் மக்கள் கூட்டமாக காணப்படும் குமரி கடற்கரை, தாமிரபரணி பாபநாசம் படித்துறை கொரோனா தடை காலமாக இருப்பதால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் தர்ப்பணம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளதால் இன்று காலையில் கடற்கரைக்கு தர்பணம் செய்ய வந்தவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Mahalaya Amavasya 2020: Prohibition on Tarphanam Deserted holy places

இதனால் பாரம்பரிய முறைகளை கடைபிடிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் சடங்குகள் பொது மக்கள் செய்தனர்.

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசையில் புனித நீர் நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடுவார்கள். இந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் பொதுமக்கள் அதிகம் பேர் கூட தடை உள்ளது.

மகாளய அமாவாசை 2020: பித்ரு கடன் போக்கினால் தடைகள் நீங்கி நல்லது நடக்கும்மகாளய அமாவாசை 2020: பித்ரு கடன் போக்கினால் தடைகள் நீங்கி நல்லது நடக்கும்

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் தர்ப்பணம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளதால் இன்று காலையில் கடற்கரைக்கு தர்பணம் செய்ய வந்தவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

Mahalaya Amavasya 2020: Prohibition on Tarphanam Deserted holy places

தாமிரபரணியில் குளிக்க தடை

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடுவதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. வெளியூர்களில் இருந்து பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் பலரை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். பாபநாசம் கோவிலுக்கு மட்டும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவில் முன்பாக விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, ஆற்றுப்படித்துறைக்கு பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கடந்த ஒரு வார காலமாக பாபநாசத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் நேற்று கோவில் ஆற்றுப்படித்துறை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

English summary
On Mahalaya Amavasai Day Papanasam Thamiraparani River, Kanyakumari Beach holy bath and Tharpanam ban the police sent back those who came to give darpanam. Kumari beach, which is crowded on the days of the new moon, is deserted without crowds as the Tamiraparani Papanasam Staircase Corona is closed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X