For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குருப்பெயர்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு எப்படி இருக்கு?

குரு பகவான் விருச்சிகம் ராசியில் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இந்த குரு பெயர்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: நிகழும் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12ஆம் தேதி 29 10 2019 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி 48 நிமிடத்தில் குருபகவான் வாக்கியப்படி விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. ரிஷபம். கடகம். கன்னி. துலாம் தனுசு. மகரம். மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் திடீர் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, தற்காலிக முதல்வராக இருந்து துணை முதல்வரான ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம். மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி விரைய குரு. "வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும்" என்பது பழம் பாடல். இது நாள் வரை லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டிற்கு வருகிறார். மகரம் ராசிக்கு ஏழரை சனி அதுவும் விரைய சனி நடக்குது. இப்போ குருவும் சனி கேது உடன் 12ஆம் வீட்டிற்கு வருவது விபரீத ராஜயோக காலம். சனி குரு சாதகமாக இருந்த காலத்தில் திடீர் பதவி கிடைத்தது. அமைச்சாராக இருந்தவர் திடீர் முதல்வரானார். சோதனைகளை வென்று சாதனைகளாக மாற்றினார் இந்த குரு பெயர்ச்சி அவருக்கு என்ன கொடுக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான் தனுசு ராசியில் அமரப்போகிறார். ஓ. பன்னீர் செல்வம் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம்.
'ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்' என்று சொல்வார்கள். மீனம் ராசிக்காரர்களுக்கு பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பார்கள். ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக நம்பர் 2 இடத்தில் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். அவர் இருக்கும் போது இரண்டு முறை தற்காலிக முதல்வராக இருந்து ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்தவர். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னரும் நள்ளிரவில் பதவியேற்று சில நாட்கள் மட்டுமே முதல்வராக தாக்கு பிடிக்க முடிந்தது. சரியில்லாத சனி பெயர்ச்சி... கூட குருவும் சாதகமான நிலையில் இல்லாத காரணத்தால் பதவியிழந்தார். கட்சியே பிளவு பட்டது. தசாபுத்தி ஜாதக பலன் கொஞ்சம் சரியாக மீண்டும் இணைந்து துணைமுதல்வரானார். இந்த குரு பெயர்ச்சி அவருக்கு சாதகமாக பாதகமா என பார்க்கலாம்.

சனி கொடுத்த யோகம்

சனி கொடுத்த யோகம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் லக்கினம் மகரம், துலாம் ராசியில் உச்சம் பெற்ற சனி, கும்பத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ரிஷபத்தில் குரு மிதுனத்தில் கேது, விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் தனுசு ராசியில் ராகு கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. அவரது ஜாதகத்தில் சச மஹா யோகம் அமைந்துள்ளது. இதுவே அவருக்கு முதல்வர் பதவியை தேடி கொடுத்துள்ளது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி சனி திசை சுக்கிர புத்தியில் முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. எதிரிகள் ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலும் அதிர்ஷ்டக்காற்று அவர் பக்கமே வீசியது.

வெளிநாடு பயணங்கள்

வெளிநாடு பயணங்கள்

12க்கு அதிபன் 12ல் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலம். உங்க 12ஆம் வீட்டில் சனி அமர்ந்ததால் அதிக விரையம் ஏற்பட்டது. இனி இதுநாள் வரை ஏற்பட்ட இழப்புகளை தடுப்பார். விரையங்களை பசிஸ்டிவ் ஆக கொடுப்பார். சுப பயணங்கள், சுப விரையங்களை தருவார். வெளியூர், வெளிநாடு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்குவார். ஏற்கனவே வெளிநாடு பயணங்களை வெற்றிகரமாக முடித்து விட்டு திரும்பியிருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி.

நோய்கள் நீங்கும்

நோய்கள் நீங்கும்

குரு ஆறாம் வீட்டை பார்ப்பதால் வியாதிகளை போக்குவார். ஆயுள் கண்டம் இருந்தவர்களுக்கு அந்த கண்டங்கள் விலகுகிறது. வயிறு சார்ந்த பிரச்சினை பொன்னவன் பார்வையால் விலகும். வருமானம் பெருகும் கடன்களை அடைக்க குரு வழிகாட்டுவார். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலை இனி மாறும். பணம் கையிருப்பு அதிகமாக சேரும். உடல் நல கவலைகள், மன கவலைகள் தீரும். இதுநாள் வரை இருந்த தடைகள் விலகி அருமையான சூழ்நிலை உருவாகும்.

மீனம் ராசி

மீனம் ராசி

ஓ.பன்னீர் செல்வம் சிம்ம லக்னத்தில் மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளதாக ஜாதகம் கணிக்கப்பட்டுள்ளது. லக்னத்தில் கேது கன்னி ராசியில் சனி வக்ரம். தனுசு ராசியில் புதன் மகரத்தில் சூரியன், சுக்கிரன் கும்பத்தில் செவ்வாய் குரு ராகு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. இவரது ஜாதகத்தில் அரசாங்க கிரகமான சூரியன், அதிகாரத்துக்குரிய கிரகம் செவ்வாய், ராஜதந்திர கிரகமான சனி வலுவாக இருக்கின்றன. மேலும், குரு ராகு சாரத்திலும் ராகு குருவின் சாரத்திலும் இருப்பது நல்ல அம்சம்.

எதிர்ப்புகளை சமாளிக்கலாம்

எதிர்ப்புகளை சமாளிக்கலாம்

ஒன்பதாம் இடத்தில் சஞ்சரித்து, பல நன்மைகளை வாரி வழங்கிய குரு பகவான், பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியானது நல்லதல்ல என்றாலும் ஆட்சி பெற்ற குருபகவான் மன அமைதியை தருவார். பத்தாமிட குரு பதவியில் சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் எதிர்ப்புகள் தோன்றினாலும், அதை சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். குழப்பங்கள் தொடரும். கூட இருப்பவர்களால் எச்சரிக்கை தேவை. கட்சியிலும் ஆட்சியிலும் இருந்த சங்கடங்கள் தீரும்.

மகிழ்ச்சி சந்தோஷம்

மகிழ்ச்சி சந்தோஷம்

குருவின் பார்வை தன வாக்கு ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களின் மீது விழுகிறது. குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திரனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும். தன ஸ்தானத்தை பார்ப்பதால் பண வருமானம் வரும்

குரு பார்வை கோடி நன்மை

குரு பார்வை கோடி நன்மை

வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குருவின் பார்வையால் பிரச்சினைகளை கஷ்டங்களை நிவர்த்தி செய்வார்கள். திட்டமிட்டு செயல்பட வைப்பார். சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடலாம்.
ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஞானகாரகன் கேது உடன் இணையும் குரு பகவான் நன்மைகளை செய்வார். வாழ்க்கையில் கவுரவம், புகழ் ஏற்படும்.

English summary
Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam. Guru is the Lord for Dhanus rasi and Meenam rasi. Check out the Gurupeyarchi palangal for CM Edapadi Palanisamy and Deputy CM O.Panneerselvam Horoscope
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X