For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குவதை முன்னிட்டு இன்று மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. புற்று மண் சேகரித்து, சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.

Google Oneindia Tamil News

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலி நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி, 18ஆம் தேதி வரை 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 13ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழா

Navaratri brahmotsavam to begins on Tirumalai
அக்கோபர் 10 ஆம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் மலையப்ப சுவாமி காலை, மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலம் வருகிறார்.

இன்றைய தினம் அங்குரார்ப்பணத்தையொட்டி வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

நாளை முதல் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள்:

10ஆம் தேதி இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி தனது தேவியர்களுடன் வீதி உலா வருகிறார். 11ஆம் தேதி காலை 9 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா. ஆதிஷேசன் விஷ்ணுவின் வாகனம் என்பதால் முதலில் சேஷ வாகனத்தில் வீதி உலா வருகிறார் பெருமாள்.

11ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் வீதி உலா வரும் மலையப்பசுவாமி, 12ஆம் தேதி காலை 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு முத்துப் பந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

13ஆம் தேதி காலை 9 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதி உலா, இரவு 9மணிக்கு சர்வ பூபால வாகனத்தில் உலா வருகிறார். 14ஆம் தேதி காலை 9 மணிக்கு மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு பெரிய திருவடி எனப்படும் கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளிலும் உலா வருகிறார்.

15ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறிய திருவடி என போற்றப்படும் அனுமன் வாகனத்தில் வீதி உலா வருகிறார். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டமும் இரவு யானை வாகன வீதிஉலாவும் நடைபெறுகிறது.

16 ஆம் தேதி காலை சூர்ய பிரபை வாகன வீதி உலா, இரவு7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது. 17ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டமும் இரவு7 மணிக்கு குதிரை வாகன வீதி உலாவும் நடைபெறுகிறது.

18ஆம் தேதி காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம் நிகழ்கிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

English summary
The nine days Brahmostavams are one of the magnificent festivals celebrated at Tirumala.This is most important festival among all festivals in Tirumala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X