For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளான இன்று அம்பிகையை உமா மகேஸ்வரி ரூபமாக வழிபடலாம் வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

Google Oneindia Tamil News

சென்னை: நவராத்திரி பண்டிகை இன்று முதல் தொடங்குகிறது. முதல்நாளன்று துர்க்கை அன்னையை உமா மகேஸ்வரி ரூபமாக வழிபட வேண்டும். இன்றைய வழிபாட்டினால் நம் வீட்டில் உள்ள வறுமைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

நவராத்திரி பண்டிகை நாட்களில் அம்பிகையை 3 விதமாக வழிபடுகிறோம். நவராத்திரி பூஜை மட்டும் ஏன் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என வணங்குகின்றனர் என்ற கேள்வி எழுவது இயல்பு. கலைமகளுக்குத்தானே முதல் பூஜை செய்யவேண்டும். ஏன் இங்கே அலைமகளுக்கு முதல் பூஜை என்ற கேள்வி நியாயப்படி எழுவது இயல்பு.

Navratri 2020 Day 1 : Worshiping Uma Maheshwari will increase wealth

சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்றுதான் வரும். ஆனால் நவராத்திரியின்போது மட்டும் ஏன் இந்த முறை மாற்றமடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வருகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள். நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் என்பதுதான் காரணம். ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள். 9 நாட்களிலும் அன்னையை வழிபடும் முறையை அறிந்து கொள்வோம்.

புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் இருந்துதான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். இந்த வருடம் 17-10-2020 முதல் 26-10-2020 வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

முதல்நாளான இன்றைய தினம் துர்க்கா தேவி மகேஸ்வரி ரூபாமாக திகழ்கிறாள். உமா மகேஸ்வரி உமா பிரணவ நாமம். பிரணவத்தின் பொருள். நமக்கும் ஏற்படும் பிரச்சினைகளை அழிப்பவள் அம்பிகை. மகேஸ்வரனின் மனைவி. உமா மகேஸ்வரி. துர்க்கை அழிக்கும் சக்தி கொண்டவள் நம் முடைய உள்ளத்தில் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தக்கூடியவள். வீரத்தின் சொரூபமாக விளங்குபவள்.

Aippasi Month Rasi Palan 2020:ஐப்பசி மாத ராசி பலன் 2020: சிம்மம்,கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்Aippasi Month Rasi Palan 2020:ஐப்பசி மாத ராசி பலன் 2020: சிம்மம்,கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

அம்பிகையை வழிபடுவதன் மூலம் தீமையை அழித்து நன்மையை அளிப்பவள். துர்க்கை அழிக்கும் சக்தி கொண்டவள் நம் முடைய உள்ளத்தில் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தக்கூடியவள். வீரத்தின் சொரூபமாக விளங்குபவள்.

முதல்நாள் வழிபாடு எப்படி செய்வது

சனிக்கிழமை 17ஆம் தேதி சனிக்கிழமையன்று அரிசி மாவினால் பொட்டு கோலம் போட்டு, மல்லிகை, வில்வ இலை. வெண் பொங்கல், சுண்டல் பச்சை நிறம் சிறந்தது. கொலு வைத்திருப்பவர்கள் காலை மாலை 2 வேளை பூஜை. காலை 8 மணி முதல் 9 மணிக்கு பூஜை. மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் பூஜை செய்ய வேண்டும்.

நவராத்திரியின் முதல் நாளில் உமா மகேஸ்வரி வழிபாடு செய்வதன் பலன் என்ன தெரியுமா? உமா மகேஸ்வரியை வழிபடுவதன் மூலம் வறுமை நீங்கி வாழ்வு செழிக்கும். வாழ்க்கையில் செல்வ வளம் பெருகும். இன்றைக்கு உங்களுக்கு கிடைக்கும் மலர்கள், நைவேத்தியம் கொண்டு பூஜை செய்யலாம். அம்பிகையின் நாமங்களை சொல்லுங்கள். துர்கைக்கு உரிய பூஜைகளை செய்யலாம். தாம்பூலம், மஞ்சள் குங்குமம் கொடுக்கலாம்.
கொலு வைக்காதவர்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் அம்பிகையை 9 நாட்களும் வழிபடலாம். நவராத்திரி காலத்தில் வழிபடலாம். அம்பாளை வழிபடலாம்.

English summary
Each day of Navratri is associated to an incarnation of the goddess. Navratri festival starts from today. On the first day, Mother Durga should be worshiped in the form of Uma Maheshwari. It is said that today's worship will alleviate poverty and increase wealth in our home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X