• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் தெரியுமா

|

சென்னை: 2020ஆம் ஆண்டில் நிறைய பேரின் வேலை கேள்விக்குறியானது. பல ஆயிரம் பேர் வெளிநாட்டில் கை நிறைய வாங்கிய சம்பளத்தை விட்டு சொந்த நாடு திரும்பினர். புதிதாக பிறக்கப் போகும் 2021ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்குமா என்ற ஏக்கம்
அனைவருக்குமே இருக்கும். பிறக்கப்போகும் 2021ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும் என்றும் படிப்பிற்காக விமானம், கப்பலில் செல்லும் யோகம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

2021ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனி பத்தாம் இடமான மகர ராசியில் அமர்ந்துள்ளார். தற்போது பத்தாம் வீட்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குருவும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று கும்ப ராசியில் அமரப்போகிறார். பின்னர் வக்கிரமடைந்து மகர ராசிக்கு சென்று நவம்பர் மாதத்தில் கும்ப ராசிக்கு செல்வார். இந்த கிரக மாற்றம் எந்தெந்த ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகத்தை அளிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

வெளிநாடு செல்லும் யோகத்தினை தீா்மானிக்கும் கிரகங்கள் சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும். சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமான கோள்கள்.

சனிப்பெயர்ச்சி 2020-23: கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விபரீத ராஜயோகம் வரும்சனிப்பெயர்ச்சி 2020-23: கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விபரீத ராஜயோகம் வரும்

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. திரைகடல் ஓடி திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள்
அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது. சனிபகவான் பத்தாம் வீட்டில் குரு உடன் இணைந்துள்ளார். இந்த கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. அயல்நாட்டு வியாபாரம் சூடுபிடிக்கும். வருமானமும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். படித்து விட்டு அரசு வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். ஏப்ரல் மாதம் நிகழப்போகும் அதிசார குரு பெயர்ச்சியும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள கும்ப ராசிக்கு நேரடியாக நிகழப்போகும் குரு பெயர்ச்சி சில சாதகமான பலன்களை தரப்போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்திருந்தவர்களின் கனவு நனவாகப் போகிறது.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இது அஷ்டம சனிக்காலம். 2021ஆம் ஆண்டு முழுவதும் சனிபகவான் ஒன்பதாம் வீட்டில்தான் குடியிருக்கிறார். தற்போது குரு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உள்ளார். பாக்கியங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. ராகு ஜென்ம ராசியில் அமர்வதால் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் சென்று ராகு,கேதுக்களுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். அருகில் உள்ள புற்றுக்கோவிலுக்கு சென்று வர ராகு ,கேதுவால் வரக்கூடிய தோஷங்கள் விலகும். பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து புளியோதரை படைத்து வணங்கலாம்

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த காலங்களில் புதிய தொழில் முயற்சிகள் வேண்டாம். பேராசை படவேண்டாம். அகலக்கால் வைப்பது ஆபத்து. கல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம்
உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற முடியும். விளையாட்டுத்தனமாக இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அஷ்டமச்சனியிலிருந்து பாதிப்பை குறைத்து கொள்ள காலபைரவரை சனிக்கிழமை தோறும் சென்று வழிபட்டு வரலாம். சனியின் குருநாதர் இந்த காலபைரவர். ஆஞ்சநேயருக்கும் சனிக்கிழமை தோறும் நெய்விளக்கு போட்டு வர சனியால் வரக்கூடிய அத்துனை தொல்லைகளையும் விலக்க முடியும்.

கடகம்

கடகம்

சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே... அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என கொண்டாட்டமான,குதூகலமான ஆண்டாகவே 2021 ஆம் ஆண்டு இருக்க போகின்றது. ஆண்டுகிரகங்களான ராகு, கேது,சனி,குரு போன்ற கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நற்பலன்களை தர காத்திருக்கின்றன. கண்டச்சனி
காலம் என்றாலும் கவலை வேண்டாம். பிறக்கப் போகும் புத்தாண்டு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சமூக அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதார உயரும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும்.

English summary
Check out New year rasi palangal 2021 - Education and Carrier prediction. The work of a lot of people in 2020 is questionable. Several thousand people returned home after leaving a lot of hand-picked salaries abroad. Nostalgia for the new born 2021 to get a good job Will be for everyone. Let's see which astrologers will have a job abroad in the year 2021, when birth, plane and ship yoga is available for study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X