For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்வம் அதிர்ஷ்டம் கிடைக்க 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்

செல்வம், செல்வாக்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்கும்,அதிபதிக்கும் அதிபதிகளான கடவுள்கள் உள்ளனர். இவர்களின் செயல்பாடு, அமைப்பு பொருத்து ஒருவரின்

Google Oneindia Tamil News

சென்னை: மேஷம் முதல் மீனம் வரை மொத்தம் 12 ராசிகளும் அதில் 27 நட்சத்திரங்கள் என உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி இருப்பது போன்று, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திர அதிபதிகளும் இருக்கின்றன. இவற்றின் இணைந்து நம்மை வழிகாட்டி வருகின்றன. என்னோட ராசி நல்ல ராசி என்று எல்லோருமே பாடலாம் காரணம் 12 ராசிகளுமே நல்ல ராசிதான். 27 நட்சத்திரங்களுமே நல்ல நட்சத்திரங்கள்தான். ராசிக்கு உரிய கோவில்கள் தெய்வங்களை வணங்க நம்முடைய நேரமும் நல்ல நேரமாகும். செல்வ வளமும் பெருகும்.

வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டது என்றும் எல்லாம் விதிப்படி என்று அமைதியாய் இருந்துவிடாமல் இறைவனை மனதார வேண்டினால் நிறைய நன்மைகள் நடக்கும். நாம் நல்லதே நினைத்து நல்லதே செய்தால் விதியும் நம் வசமாகும் 12 ராசிக்காரர்களும் தங்களின் தெய்வங்களை தினம் ஒரு நிமிடம் நினைத்து வணங்க செல்வ வளம் பெருகும் அதிர்ஷ்டம் தேடி வரும். நன்மைகள் நடக்கும்.

அந்தந்த ராசியினருக்குரிய கோவில்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வணங்கலாம். அந்தந்த தெய்வங்களின் உருவப் படங்களை உங்கள் வீட்டில் வைத்து தினமும் வணங்கலாம். உங்கள் இராசியின் முழு நன்மையும் உங்களுக்கு தவறாமல் கிடைக்க தினம் ஒரு நிமிடம் கண்களை மூடி நம்முடைய ராசிக்கு உரிய தெய்வத்தை வணங்க அதிர்ஷ்டமும் ஆனந்தமும் தேடி வரும்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசி என்பது மேடான ராசி என்றும், இந்த ராசியில் பிறந்தவர்கள் மேன்மையான அந்தஸ்துடன், கீர்த்தி செல்வாக்கு,சுகம் இவைகளைப் பெற்றிருப்பார்கள். என்று பொதுவாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. மேஷ ராசிக்காரர்கள் வாக்கு வன்மையும்,கோப குணம், முரட்டு சுபாவங்களுடனும்,கம்பீரமான தோற்ற்ங்களுடனும்,தெய்வீக வழிபடுகள்,சாஸ்திர ஆசார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். கல்வியில் திறன் பெற்றிருப்பார்கள். செவ்வாய் பலத்தை அதிகரிக்கவும் செல்வ வணம் பெருகவும் சிவனை வணங்க வேண்டும் நன்மை நடக்கும். சிவனை வணங்க முருகனின் ஆசி கிடைக்க வேண்டும். பிரதோஷ வழிபாடு மறக்காமல் செய்ய வேண்டும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷிபராசிக்காரர்கள் பருந்த உடலும்,கம்பீரமான தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆடை ஆபரணம், நகைகள், செல்வம் முதலியவைகளைப் பெற்றிருப்பார்கள். வேடிக்கையாகப் பேசும் குணங்களுடன் பிரியமாகப் பேசியும் பழகும் குணமும் இருக்கும். செல்வத்துடனும்,செல்வாக்குடனும், சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்ட இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் மகாலட்சுமி. இதனால் அதிர்ஷ்டமும் செல்வமும் தேடி வரும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் புதனை ஆட்சி நாதனாகக் கொண்டவர்கள். கல்வியில் தேர்ச்சியும்,கணிதத்தில் வன்மையும், பேச்சில் சாமர்த்தியம் கொண்டவர்கள். சிரித்த முகத்தோடு பேசினாலும் சுயநலக் காரியவாதிகளாகவும் இருப்பார்கள். தெய்வீக வழிபாடுகளும், ஆசார அனுஷ்டானங்களீல் நம்பிக்கையும், கீர்த்தியையும் பெற்றிருப்பார்கள். எழுதுவதில், கலைத்துறையில் ஆர்வமும், திறமையும் பெற்றிருப்பார்கள். செல்வத்துடனும், செல்வாக்குடனும் திறமையினால் முன்னேறுவார்கள். புதனின் தெய்வமான ஸ்ரீமன் நாராயணரை வணங்க நன்மைகள் நடக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

கடகம்

கடகம்

மனோகாரகன் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் வளமான நினைவாற்றலை கொண்டவர்கள். அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இரக்கம் உள்ளவர்களாகவும் இருப்பர். அதிகமான உணர்ச்சி வசப்படல் காரணமாக நரம்புகள் பாதிக்கப்படும் அளவிற்கு எளிதில் கோபமடைவர். எப்படி சந்திரன், வளர்வதையும், தெய்வதையும், காண்கிறோமோ, அம்மாதிரி, கடக ராசியில் பிறந்தவர்கள் சில சமயங்களில் கூச்ச சுபாவமுள்ளவராகவும் மற்றைய சமயங்களில் மிகவும் தைரியசாலிகளாகவும் காணப்படுபவர். இவர்கள் கௌரி அம்மன் வணங்க ஆசைகள் நிறைவேறும். சந்திரனை பார்க்கும் போதெல்லாம் வணங்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சூரியனை அதிபதியாகக் கொண்டவர்கள். பெரிய மனிதர்களின் நட்பும், சகவாசமும்,அந்தஸ்தும் ஏற்படும். சமூகத்தில் கீர்த்தியுடனும்,பிரபலத்துடனும், விளங்குவார்கள். உன்னத பதவியில் செல்வம்,செல்வாக்கு, ஸ்திர சொத்துக்களுடன் இருப்பார்கள். குடும்பம் சிறப்புடன் இருக்கும். புத்திர பாக்யங்களுடன் வாழ்வார்கள். சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமான் அருளைப் பெற்று இருப்பார்கள். அதிகாரங்களுடனும், சிறிது கர்வம் கொண்டவர் போல நடந்துகொள்வார்கள். கோபமும், படபடப்பும் தலையெடுத்திருக்கும். பலம் அதிகரிக்க தினமும் ஒரு நிமிடம் சிவனை வணங்குங்கள். சிவ சிவ என்று சொல்ல அதிர்ஷ்டம் தேடி வரும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தெய்வீக வழிபாடுகளில் சிறந்தவர்களாகவும், ஆசார சீலர்களாகவும்,நீதி நேர்மை,பண்புகளை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சமூக சேவைகள் செய்வார்கள். செல்வத்துடனும், செல்வாக்குடனும் சிறப்புடன் விளங்குவார்கள். புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணன். நாராயணனை வணங்க வெற்றிகளும் அதிர்ஷ்டமும் தேடி வரும்.

துலாம்

துலாம்

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே. செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர்களாவும் செல்வாக்குடனும் இருப்பார்கள். உங்க வீட்டில் அதிகமான நபர்கள் இருப்பார்கள். பெரிய மனிதர்கள், செல்வாக்கு அதிகாரம் உயர்பதவி கொண்டவர்களின் நட்பு பெற்றிருப்பார்கள். பேச்சில் ஆணித்தரமாகவும், வியாபார நோக்கங்கள் கொண்டதாகவும் பேச்சு இருக்கும். அதே நேரம் அதிகமாக மற்றவர்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். தங்கள் குடும்பத்தைவிட்டு மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடமாட்டார்கள். அதிர்ஷ்டமும் செல்வமும் அதிகரிக்க அன்னை மகாலட்சுமியை வணங்கவேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.தைரியமாக எந்த செயலையும் செய்வார்கள். பெரிய வேலைகளை தந்திரத்துடன் செய்வார்கள். கஷ்டப்பட்டு அடுத்தவர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும். சிவனை வணங்க வேண்டும். தினசரியும் சிவ வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும். முருகன் அருள் கிடைக்கும்.

தனுசு

தனுசு

குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் நீதி நேர்மை பண்பு உள்ளிட்ட நல்லொழுக்கங்களைக் கொண்டவர்கள். உயர் அந்தஸ்து,பதவி, செல்வாக்கு படைத்தவர்களிடம் நட்பைக் கொள்ளுவார்கள். தங்களது கல்வி, அறிவு திறமைகளால் உயர் பதவியை அரசாங்கத்தில் பெறுவார்கள். அதிகாரங்களுடனும், அந்தஸ்துடனும் இருப்பார்கள். பிறருடைய குற்றங்களை, குணங்களை,வெகு எளிதில் கண்டு கொள்வார்கள். செல்வம் செல்வாக்கு பெற்று திகழவும் அதிர்ஷ்டம் தேடி வரவும் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

மகரம்

மகரம்

மகரராசியில் பிறந்தவர்கள் பிறக்கும்போது செல்வந்த குடும்பத்தில் பிறந்து, நடுத்தர வயதில் சில சிரமங்களை அனுபவித்து,பிற்காலத்தில் பெரிய அந்தஸ்தையும், செல்வ சுகங்கலையும், ஸ்திரசொத்துக்களையும் பெறுவார்கள். குடும்பம் செல்வம்,செல்வாக்குடன் கீர்த்தி பெற்று இருக்கும். புத்திர சந்தானங்களுக்கு குறைவிருக்காது.மனவியிடம் அதிகமான பிரியத்துடனும்,மனைவியின் போக்கின்படி நடந்து கொள்ளும் சுபாவத்தையும் பெற்றிருப்பார்கள். தனக்கு நிகர் யாரும் கிடையாது என்ற நோக்கத்துடன் இருப்பார்கள். சனியை ஆட்சிநாதனாகக் கொண்ட நீங்கள் சனிபகவானின் குருவான சிவனின் அம்சமான பைரவரை வணங்க நன்மைகள் நடக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சனியை அதிபதியாகக் கொண்டவர்கள். கடும் உழைப்பாளர்கள் நேரம் காலம் பற்றி கவலைப்படாமல் உழைப்பார்கள். இவர்களின் மிகப்பெரிய பலமே கடினஉழைப்புதான். உழைப்பால் முன்னேறி எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் அதற்காக தலைக்கணம் கொள்ள மாட்டார்கள்.
நகைச்சுவை உணர்வு மற்றும் தகவமைப்பு பண்புடையவர்கள் இவர்கள். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதை வெறுப்பார்கள். சனியை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் காலபைரவரை வணங்கலாம்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் அதிக உணர்சியுடையவர்கள். மற்றவர்களின் உணர்வுகளை அனுதாபத்தோடு பார்ப்பார்கள். இரக்க குணமுள்ளவர்கள் இவர்கள். தாங்கள் விரும்பும் காரணம் மற்றும் நபர்களுக்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இவர்களின் கற்பனை உயர பறக்கும். குருவை ராசி நாதனக் கொண்ட மீனம் ராசிக்காரர்கள் தான் செய்த காரியங்கள், செய்யப் போகும் காரியங்கள் எதையும் வாய்விட்டு சொல்ல மாட்டார்கள். எவரிடமும் மனம் விட்டுப் பழகமாட்டார்கள். சுமாரான கல்வி ஞானங்கள் தெய்வ வழிபாடுகள், ஆசார அனுஷ்டானங்கள் இவைகளை அறிந்திருப்பார்கள். மீனம் ராசிக்காரர்கள் சிவ அம்சமான தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். சித்தர்கள் ஜீவ சமாதி சென்று வணங்க நன்மைகள் நடக்கும். தினம் ஒரு நிமிடம் கண்களை மூடி வணங்க சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் கோடி நன்மைகள் கிடைக்கும்.

English summary
Astrology is not a belief but a well defined science and using it one have deep knowledge about any individual’s character traits.one should worship god and goddess as per their moon sign, which further boosts their cosmic energy and impresses them to planetary motions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X