For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதன்பெயர்ச்சி 2019: புத்தாண்டில் சூரியன் சனியோடு தனுசில் குடியேறப்போகும் புதன் - பலன்கள்

விருச்சிக ராசியில் குரு உடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் புத பகவான் ஜனவரி 1ஆம் தேதியன்று தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இந்த புதன் பெயர்ச்சி எப்படியிருக்கும் எ

Google Oneindia Tamil News

சென்னை: புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் தற்போது குரு உடன் விருச்சிகத்தில் திலிருந்து தனுசுக்கு ஜனவரி 1ஆம் தேதியன்று இடப் பெயர்ச்சியடைகிறார். தனுசு ராசியில் ஏற்கனவே சூரியன், சனி குடித்தனம் செய்து கொண்டிருக்க, இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுகிறார். 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்வோம்.

நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும். சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இடம்பெயரும்.

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், பய உணர்வு, சஞ்சலம், சபல புத்தி, மனநலம் குன்றுதல், காக்கை வலிப்பு, அலித்தன்மை, மறதி, நடுக்கம் போன்ற உடல் உபாதைகள் உண்டாகும்.

புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு வீடுகளுக்கு சொந்தமாகும் கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது. புதன் கிரகத்திற்கு நண்பா்கள் சூாியன் சுக்கிரன். புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்து தரும் சம கிரகங்கள் சனி குரு செவ்வாய். புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன். இப்போது புதன் தனது நண்பர் சூரியனுடனும், சம கிரகமான சனியோடும் இணைந்து தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்கு புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் சனி, சூரியனுடன் இணைந்து அமர்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். பூா்வீக சொத்தில் பிரச்னைகள் தலைதூக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது. தொழில் தடை ஏற்படும் முயற்சிகளில் கவனக்குறைவு ஏற்படும். பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் 2 மற்றும் 5ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் 8வது இடத்தில் அமர்கிறார். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். கணவரை கூட்டுக்கொண்டு கடை வீதிக்கு சென்று பர்ஸை காலி செய்யுங்கள் அந்த அளவிற்கு

ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருவாய் திருப்தி தரும் பிள்ளைகளின் சாதனை பெருமைப்பட வைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன்கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனத்திற்கு புதன் ராசி அதிபதி மற்றும் சுக ஸ்தான அதிபதி. உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலி பங்குதாரா்களிடம் எச்சாிக்கையாக இருக்கவும். பணப்பிரச்னை தலையெடுக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். பாதிப்புகள் குறைய புதன் காயத்ரி மந்திரத்தை கூறி பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வணங்கலாம்.

கடகம்

கடகம்

கடகத்திற்கு புதன் 3 மற்றும்12 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா் புதன். கடகம் ராசிக்கு 6வது இடத்திற்கு புதன் செல்கிறார். 6வது இடம் ருண ரோக ஸ்தானம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. இது திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். சகோதா்களின் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வது நல்லது. சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்வது அதிக நன்மை தரும்.

சிம்மம்

சிம்மம்

சிம்மத்திற்கு புதன் 2 மற்றும் 11 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். சிம்மம் ராசிக்கு 5வது இடத்தில் புதன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் தம்பதியர் இடையே பிரச்சினை வந்து போகும். மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள் அப்புறம் அது தொல்லையில் வந்து முடிந்து விடும். குழந்தை வேலாயுதசாமியை தரிசனம் செய்யுங்கள் புதன்கிழமைகளில் நவகிரக ஆலயத்திற்கு சென்று புதனை வணங்குங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கு புதன் ஆட்சிநாதன் மற்றும்10 ஆம் வீட்டுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் அமர்ந்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினா் வருகை உண்டு. பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். வாகன லாபம் உண்டு. வியாபாரத்தில் வேலைப்பளு அதிகாிக்கும். ஒருமுறை திருவெண்காடு சென்று புதன் பகவானை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்கு புதன் பகவான் 9 மற்றும் 12ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்வதால் நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்வா்களுக்கு பிரச்னை ஏற்படும். பண வருவாய்க்கு பஞ்சமிருக்காது என்றாலும் கடன் தொல்லை அதிகாிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் மருத்துவ செலவு அதிகரிக்கும். பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு புதன் 8 மற்றும் 11ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் புதன் அமர்வது உற்சாகமான கால கட்டமாகும். பேச்சில் இனிமை கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உதவிகள் வந்து சேரும். இந்த கால கட்டத்தில் எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். ஸ்ரீனிவாசப்பெருமாளை வணங்கி வர மேலும் பல நன்மைகள் நடைபெறும்.

தனசு

தனசு

தனசு ராசிக்கு புதன் 7 மற்றும் 10 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசியில் அமரும் புத பகவானால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாதிப்புகள் குறைய புதன்கிழமை தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கவும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்கு புதன் 6மற்றும் 9ஆம் வீடுகளுக்குச் சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். அலுவலகத்தில் பாலிடிக்ஸ் அதிகரிக்கும். எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். உடல் உபாதை ஏற்படும். நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்கவும்.

கும்பம்

கும்பம்

கும்பத்திற்கு புதன் 5 மற்றும் 8 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். நன்மைகள் நடைபெற பச்சை நிற ஆடைகளை அணியவும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்கு 4 மற்றும் 7 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரரான புதன் 10வது இடத்தில் அமர்கிறார். வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான இடமாகும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெருமாளை புதன்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

இது பொதுவான பலன்கள்தான். தசாபுத்தி, ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்து உள்ள நிலையைப் பொருத்து நன்மை, தீமைகள் நடைபெறும்.

English summary
Mercury Transit From Scorpio to Sagittarius January 1,2019. The prediction for each person varies depending on the janma and lagna dashas of that person.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X