For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2020ஆம் ஆண்டில் 2 வைகுண்ட ஏகாதசி - என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா

2020 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை இந்து பண்டிகைகள் எந்தெந்த தேதிகளில் வருகின்றன என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

மதுரை: 2019 ஆண்டு முடியப்போகிறது. 2020ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. 2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டில் 2 முறை சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டில் என்னென்ன பண்டிகைகள் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வருகின்றன என பார்க்கலாம்.

ஜனவரி மாதம் ஆண்டு தொடக்கத்தின் முதல் மாதம். இந்த மாதம் தொடங்குகிறதைப் பொருத்துதான் அந்த ஆண்டு சிறப்பாகச் செல்லும் என்று நினைப்பார்கள். அதனால் அந்த மாதத்தின் முதல் நாள் ஏராளமான பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படும். அதுதவிர அந்த மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் வருகின்றன என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

2020 Hindu festivals from January to December

இந்த பண்டிகை நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் விரதமிருந்து கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.

ஜனவரி முதல் மார்ச் வரை விரத நாட்கள்

ஜனவரி 6 ஆம் தேதி ஸ்ரீவைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

ஜனவரி 10 - மார்கழி பவுர்ணமி ஆருத்ரா தரிசனம்

ஜனவரி 14 - போகிப்பண்டிகை

ஜனவரி 15 - தைப்பொங்கள் - தை முதல் நாள்

ஜனவரி 16 - மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17 - காணும் பொங்கல்

ஜனவரி 24 - தை அமாவாசை மவுனி அமாவாசை நாள்

ஜனவரி 29 - வசந்த பஞ்சமி

பிப்ரவரி 1 - ரத சப்தமி சூரியனை வணங்கும் நாள்

பிப்ரவரி 2 - பீஷ்ம அஷ்டமி

பிப்ரவரி 8 - தைப்பூசத் திருநாள்

பிப்ரவரி 21 - மகா சிவராத்திரி

மார்ச் 8 - மாச மகத் திருவிழா

மார்ச் 9 - ஹோலிப்பண்டிகை

மார்ச் 14 - காரடையான் நோன்பு

மார்ச் 25 - உகாதி பண்டிகை

ஏப்ரல் முதல் ஜூன் வரை விரத நாட்கள்

ஏப்ரல் 2 - ஸ்ரீராம நவமி

ஏப்ரல் 7- பங்குனி உத்திரம்

ஏப்ரல் 14 - சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு விசு பண்டிகை

ஏப்ரல் 26 - அக்ஷய திருதியை

ஏப்ரல் 28 - சங்கர ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி

மே 4 - ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்

மே 4 முதல் 29 வரை அக்னி நட்சத்திர காலம்

மே 6 - கள்ளழகர் எதிர்சேவை

மே 7 - சித்ரா பவுர்ணமி மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல்

ஜூன் 4 - வைகாசி விசாகம்

ஜூன் 28 - ஆனி உத்திர தரிசனம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை பண்டிகை நாட்கள்

ஜூலை 24 - ஆடிப்பூரம்

ஜூலை 25 - நாக பஞ்சமி

ஜூலை 31 - ஸ்ரீவரலட்சுமி விரதம்

ஆகஸ்ட் 2 - ஆடி பதினெட்டாம் பெருக்கு

ஆகஸ்ட் 2 - சங்கரன் கோவில் ஆடித் தபசு

ஆகஸ்ட் 3 - ஆவணி அவிட்டம்

ஆகஸ்ட் 7 - ஸ்ரீமஹாசங்கட சதுர்த்தி

ஆகஸ்ட் 11 - ஸ்ரீ கோகுலாஷ்டமி

ஆகஸ்ட் 22 - விநாயகர் சதுர்த்தி

ஆகஸ்ட் 23 - ரிஷி பஞ்சமி

செப்டம்பர் 2 - மகாளய பட்சம் ஆரம்பம்

செப்டம்பர் 17 - மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஏற்ற நாள்

அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை நாட்கள்

அக்டோபர் 17 - நவராத்திரி ஆரம்பம்

அக்டோபர் 25 - சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை

அக்டோபர் 26 - விஜயதசமி

நவம்பர் 12 - கோவஸ்த துவாதசி

நவம்பர் 13 - தனத்திரயோதசி

நவம்பர் 14 - தீபாவளி பண்டிகை, லட்சுமி பூஜை செய்ய நல்ல நாள்

நவம்பர் 15 - கந்த சஷ்டி ஆரம்பம்

நவம்பர் 20 - கந்த சஷ்டி சூரசம்ஹாரம்

நவம்பர் 26 - துளசி கல்யாணம்

நவம்பர் 29 - திருக்கார்த்திகை

டிசம்பர் 7 - கால பைரவ ஜெயந்தி

டிசம்பர் 15 - தனுர் மாத பிறப்பு மார்கழி பூஜை தொடக்கம்

டிசம்பர் 25 - ஸ்ரீவைகுண்ட ஏகாதசி

டிசம்பர் 30 - ஆருத்ரா தரிசனம்

English summary
Tamil Nadu takes pride in its age-old culture. Let’s discuss the festivals celebrated in Tamil Nadu and how they are different from others. But before that, find out Tamil festivals, holidays and much more in our Tamil Calendar 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X