• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

2020 ஆம் ஆண்டு பெண்களுக்கு எப்படி இருக்கும் - பலன்கள் பரிகாரங்கள்

|
  Sani Peyarchi 2020 | Mesham | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- மேஷ ராசிக்கு பலன்கள் எப்படி ?

  சென்னை: 2020ஆம் ஆண்டு பெண்களுக்கு எப்படி இருக்கும். பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிறைந்த ஆண்டாக இருக்குமா? என்றெல்லாம் பலரும் கேட்கலாம். காரணம் 2019ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்த ஆண்டாக இருந்தது. தமிழகத்தில் பொள்ளாச்சி சம்பவம் போல பல சம்பவங்கள் நிகழ்ந்தன. சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த பிரச்சினைகள் எதுவும் இல்லாத பாதுகாப்பான ஆண்டாக அமையுமா? பொருளாதார வளம், வேலை, தொழில் குடும்பத்தில் சந்தோஷம் நிம்மதி போன்றவை 2020ஆம் ஆண்டில் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

  புத்தாண்டு பிறக்கும் போதே அமோகமாக உள்ளது. பெண்களுக்கு அற்புதமான ஆண்டு, பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கும். பெண்களை பாதிக்கச் செய்யும் விசயங்களுக்கு கடுமையான சட்டங்கள் மூலம் தண்டனை கிடைக்கும். பெண்கள் விசயத்தில் தவறு செய்யவே யாரும் நினைக்கக்கூடாத அளவிற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

  2020ஆம் ஆண்டு புதன்கிழமை மார்கழி 16ஆம் நாள் ஜனவரி 1 கன்னி லக்னம், மூன்றாம் வீட்டில் செவ்வாய், நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரியன், குரு, சனி, கேது, புதன் என ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. ஐந்தாம் வீடான மகரத்தில் சுக்கிரன் ஆறாம் வீடான கும்பத்தில் சந்திரன், பத்தில் ராகு இருக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் எந்த ராசிக்கார பெண்களுக்கு சாதகமாக உள்ளது என்று பார்க்கலாம்.

  மேஷம்

  மேஷம்

  2020ஆம் ஆண்டு மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு அற்புதங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. காரணம் சனியும் குருவும் உங்களுக்கு சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் தரப்போகின்றனர். மகாலட்சுமியின் அருள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. தொட்டது துலங்கும், வேலையில் வருமானம் அதிகமாகும், நிரந்தரமான வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் பதவி உயர்வு தேடி வரும். ஆன்மீக பயணங்கள் அதிகம் செல்வீர்கள். பெண்கள் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குங்கள். தினசரி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் நல்லதே நடக்கும். ஆலங்குடி குரு பகவானை போய் ஒருமுறை தரிசனம் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும். செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து வாருங்கள் நல்லது நிறைய நடக்கும்.

  ரிஷபம்

  ரிஷபம்

  ரிஷபம் ராசியில் பிறந்த பெண்களே 2020ஆம் ஆண்டு உங்களுக்கு சாதனையான ஆண்டாக அமையப்போகிறது. காரணம் உங்க ராசிக்கு சங்கடங்களை கொடுத்து வந்த அஷ்டமத்து சனி இனி இடம்மாறி பாக்ய ஸ்தானத்திற்கு போகிறார். ஆண்டின் தொடக்கத்தில் கிரகங்கள் அஷ்டம ஸ்தானத்தில் இருக்கின்றன. ஆரம்பத்தில் சோர்வாக இருந்தாலும் கிரகங்கள் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான நிலையில் இருப்பதால் நினைத்தது நிறைவேறக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரப்போகிறது. ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். இந்த ஆண்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

  மிதுனம்

  மிதுனம்

  மிதுனம் ராசி பெண்களே 2020ஆம் ஆண்டு நீங்க பணம் விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப நல்லது. நெருங்கிய உறவினர்களாகவே இருந்தாலும் சொந்த பிரச்சினைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்க உண்டு உங்க வேலை உண்டு அப்படின்னு இருந்தா பிரச்சினை எதுவும் இல்லை. ராசியில உள்ள ராகு, ஏழாம் வீட்டில உள்ள கேது சின்னச் சின்ன சங்கடங்களை தரலாம். உங்க ராசி மீது குருவோட பார்வை விழுவதால் திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிப்பெண்களுக்கு கெட்டிமேளம் கொட்டும். திருமணம் முடிந்து புத்திரபாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கண்டச்சனி முடிந்து அஷ்டம சனியாக வரப்போவதால் பணம் கடன் கொடுக்காதீங்க. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவே போடாதீங்க. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்க நல்லதே நடக்கும்.

  கடகம்

  கடகம்

  கடக ராசி பெண்கள் ஆண்டு முழுவதும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். எந்த காரணத்தைக் கொண்டும் வரவுக்கு மீறிய செலவுகள் செய்யாமல் இருப்பது நல்லது. அதிக அலைச்சல்கள் நிறைந்த ஆண்டு. வேலைப்பளுவினால் உடல் சோர்வு ஏற்படும். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். அப்படி இல்லாத பட்சத்தில் உடல்நிலை பாதிக்கும். வேலையில் கவனமாக இருங்க. குடும்ப பிரச்சினைகளை தனியாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது உங்களுக்கே பிரச்சினையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்து மாத்திரைகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

  சிம்மம்

  சிம்மம்

  சிம்ம ராசிக்கார பெண்களே இந்த ஆண்டு உங்களுக்கு புகழும் செல்வாக்கும் கூடப்போகிறது. நீங்க தொட்டது எல்லாம் பொன்னாகப் போகிறது. உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் நீண்டகாலமாக நினைத்துக்கொண்டிருந்த காரியங்கள் நிறைவேறும் உங்க கனவுகள் நனவாகக்கூடிய காலம் வந்து விட்டது. அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. உங்க தசாபுத்தியும் உங்களுக்கு சாதகமாக இருந்தால் நீங்க 2020ஆம் ஆண்டை ரொம்ப உற்சாகமாக கொண்டாடுவீர்கள். உங்களுக்கு பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். பர்ஸ் நிறைய பணம் இருக்கும். வீடு கட்ட வண்டி வாகனம் வாங்க லோன் கிடைக்கும். உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்.

  கன்னி

  கன்னி

  கன்னி ராசிக்காரர்களே 2020ஆம் ஆண்டு உங்க ராசிக்கு மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க சிலருக்கு உடன் வேலை செய்பவர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். கூட்டுத்தொழில் செய்பவர்களால் சில இடைஞ்சல்கள் வரலாம். பொருளாதார விசயத்தில் எச்சரிக்கையாக இருங்க ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கவனமாக இருங்க. கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சின்னச்சின்ன சண்டைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போங்க நல்லதே நடக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குங்கள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.

  துலாம்

  துலாம்

  துலாம் ராசிக்கார பெண்கள் கொஞ்சம் அலங்காரப்பிரியைகள் 2020ஆம் ஆண்டு சுக ஸ்தானத்தில் சனி அமரப்போகிறார். மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் கேதுவும் குருவும் சஞ்சரிக்கின்றனர். பகலில் பக்கம் பார்த்து பேசுங்க, இரவில் அதுவும் பேசாதீங்க. அடுத்தவர்கள் விசயத்தில் தலையிடவே தலையிடாதீங்க. உங்க அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். இந்த ஆண்டு இரவு நேரங்களில் தனியாக எங்கேயும் போக வேண்டாம். நெடுந்தூர பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்தால் மட்டுமே கையில் பணம் தங்கும் இல்லாவிட்டால் விரைய செலவுதான் ஏற்படும்

  விருச்சிகம்

  விருச்சிகம்

  விருச்சிக ராசிக்கார பெண்களுக்கு 2020ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக அமையும் காரணம் ஏழரை சனி உங்களை விட்டு நீங்குவதால் சந்தோஷங்கள் அதிகமாகும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது குருவினால் பணம் பீரோவில் அதிகம் சேரும். நீங்க நினைத்ததை முடிப்பீர்கள். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்க பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணம் முடிந்த உடன் கையோடு புத்திரபாக்கியமும் கை கூடி வரும் ஜாக்பாட் நிறைந்த ஆண்டாக 2020ஆம் ஆண்டு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.

  தனுசு

  தனுசு

  தனுசு ராசிக்கார பெண்களே உங்களுக்கு 2020ஆம் ஆண்டும் ஏழரை சனியில் ஜென்ம சனி முடிந்து பாத சனி ஆரம்பிக்கிறது. குடும்ப சனி என்பதால் பெண்கள் வார்த்தைகளில் கவனமாக பேசுங்க. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். சண்டை போட வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க நல்லதே நடக்கும். ஆடம்பர செலவுக்காக கடன் வாங்காதீங்க அப்புறம் மாட்டிக்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க உணவு விசயத்தில் நீங்க கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாதீங்க உங்க பிரச்சினைகளையும், குடும்ப விசயங்களையும் அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க இல்லாட்டி வருட இறுதியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். இருக்கிற வேலையை விட்டு விடாதீர்கள். 2020 குரு பெயர்ச்சிக்குப் பிறகு வேறு புது வேலை பற்றி யோசிக்கலாம்.

  மகரம்

  மகரம்

  மகரம் ராசிக்கார பெண்களுக்கு 2020ஆம் ஆண்டு ஜென்ம சனி ஆரம்பமாகிறது சோம்பேறித்தனத்தை விட்டு ஒழியுங்கள். எந்த வேலையையும் ஒத்திப்போடாதீங்க. வயிறை பட்டினி போடாதீங்க அதேபோல காரமான உணவுகளை வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று சாப்பிடாதீங்க வயிறு பிரச்சினை வந்து விடும். ஆன்லைனில் ஆஃபர் வருகிறதே என்று ஆடம்பர பொருட்களை தேவையில்லாமல் வாங்கி கடனாளி ஆகி விட வேண்டாம். விரைய குரு அதிக விரைய செலவுகளை ஏற்படுத்துவார் சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு சிறந்த நிதி அமைச்சராக இருந்தால் மட்டுமே உங்களால் பணத்தை சேமிக்க முடியும். பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்பட்டால் அப்புறம் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நிம்மதி குறையும் கவனமாக இருங்க.

  கும்பம்

  கும்பம்

  கும்ப ராசிக்கார பெண்களே என்னதால் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் கிரகங்கள் கூட்டணி அமைத்திருந்தாலும் ஏழரை சனி தொடங்குவதால் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள். உங்க நிதி நிலைமை இந்த ஆண்டு அற்புதமாக இருக்கும். குடும்பத்தினர் எல்லோரும் உங்க கையை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். எதையும் சமாளிக்கும் மன தைரியத்தோடு இருப்பீர்கள். குருவின் பார்வை சாதகமாக இருக்கிறது. திருமண வயதில் உள்ள பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும், புத்திரபாக்கியம் கிடைக்கும் சில பெண்களுக்கு அரசு வேலை கிடைக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பணத்தை சொத்துக்களாக முதலீடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

  மீனம்

  மீனம்

  மீனம் ராசி பெண்களுக்கு 2020ஆம் ஆண்டு வருமானம் வரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது காரணம் கிரகங்கள் சனியும், குருவும் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிய வேலைகள் கிடைக்கும். பதவி உயர்வும் சிலருக்கு அதிக வருமானமும் கிடைக்கும். உங்களின் சோம்பேறித்தனத்தை விட்டொழித்தால் மட்டுமே நீங்க நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். உங்களின் தூக்கமின்மை பிரச்சினைக்கு முடிவுகாலம் வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் ரொம்ப கவனமாக இருங்க கூட இருந்தே உங்களை கவிழ்க்க நேரம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். சனிபகவானுக்கு சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும் நன்மைகள் நடைபெறும்.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  New year Horoscope 2020 The year 2020 is upon us We've listed out the horoscope predictions of all the zodiac signs for women.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more