For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: கும்ப ராசிக்காரர்களுக்கு குதூகலமான ஆண்டு

கும்ப ராசிக்காரர்களுக்கு வரப்போகிற புத்தாண்டில் அதிர்ஷ்டங்கள் நிறைந்த ஆண்டாக பிறக்கப்போகிறது. ஏழரை சனி காலம் என்று கவலைப்பட வேண்டாம்.

Google Oneindia Tamil News

சென்னை: கும்ப ராசிக்காரர்களுக்கு வரப்போகிற புத்தாண்டில் அதிர்ஷ்கரமான ஆண்டாக பிறக்கப்போகிறது. உங்க பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் கிழமையில் பிறக்கிறது. இது அதிர்ஷ்டமான கால கட்டம். ஐந்தாம் வீட்டில் ராகு இருக்கிறார். லாப ஸ்தானத்தில் கிரகங்களின் கூட்டணி வலிமையாக அமைந்துள்ளது. வெற்றிகள் தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்னு பாடப்போறீங்க. உங்க ராசி நாதன் சனிபகவான் அவருடைய வீடான மகரத்தில் ஆட்சி பெறுவதால் கும்பம் ராசிக்காரர்களுக்கு எப்போதுமே கெடுதல் செய்ய மாட்டார்.

2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. கும்பம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அருமையான அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகிறது.

2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான்ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு திருக்கணிதப்படி சனி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் கும்பம் ராசி காரர்களுக்கு என்ன நன்மைகள் நடக்கும் என்று பார்க்கலாம்.
கும்பம் ராசிக்காரர்களுக்கு உங்க ராசிநாதன் சனி உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சனி அமர்கிறார். முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் குரு கேது சஞ்சரிக்கின்றனர். குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் பலவித நன்மைகள் நடைபெறப்போகிறது.

ஏழரை சனி தொடக்கம்

ஏழரை சனி தொடக்கம்

லாபத்தில் சனி, குரு கேது இணைந்துள்ளது. எட்டு மாதங்கள் தனுசு ராசியில் குரு உடன் கேது இருக்கிறார். கும்பம் ராசிக்காரர்களுக்கு லாப குரு நல்ல வேலை கிடைக்கச் செய்வார். ஏழரை சனி காலம் என்பதால் புது புது எண்ணங்கள் ஏற்படும். ஐந்தாம் வீட்டில் ராகுவிற்கு குருவின் பார்வை கிடைக்கிறது.

எந்த வேலை செய்வதற்கு முன்பாக யோசித்து செய்யவும். 30 வயதிற்கு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நல்ல வருமானம் வரும் காலம். இந்த வருஷம் நீங்க ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம்

கும்பம் ராசிக்கு குரு 11ஆம் வீட்டில் இருப்பதால் திருமணத்திற்கு நல்ல காலம் வந்து விட்டது, குரு பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டின் மீது விழுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மழலை செல்வம் இல்லையே என்று ஏங்கி தவித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் பார்வை பொன்னாக உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டின் மீது விழுகிறது. உங்கள் முயற்சிகளை அனைத்தும் வெற்றியாகும்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றகரமான நேரம். நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்க படிப்புல இருந்த தடைகள் நீங்கும். நினைத்தது படிக்கலாம். குரு லாபத்தை கொடுப்பார். சுப செலவுகளை அதிகமாக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு யோகம் கை கூடி வரப்போகிறது. ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடுவீர்கள். பொன் நகைகள் சேரும்.

உடல்நல பிரச்சினை தீரும்

உடல்நல பிரச்சினை தீரும்

இந்த ஆண்டு நோய் தொந்தரவுகள் நீங்கும். எதிரிகள் பிரச்சினை தீரும். ராகுவை குரு பார்ப்பதால் தொந்தரவுகள் நீங்கும். சந்தோஷங்கள் அதிகமாகும்.

குழந்தைகள் மீதான தொந்தரவுகள் நீங்கும் அவர்களின் உடல் நல தொந்தரவுகள் குணமடையும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். அலுலகத்தில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகமாக முதலீடு செய்து பணத்தை முடக்க வேண்டாம். நிறைய கடன் கிடைக்கும். அதற்காக கிடைக்குதேன்னு ரொம்ப கடன் வாங்காதீங்க. புத்தாண்டினை நீங்க உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்.

English summary
Check out for Kumbam Rasi 2020 new year Rasi Palangal. The horoscope 2020 predictions warn you about the auspicious and inauspicious happenings of the coming New Year 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X