For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2020ஆம் ஆண்டில் 5 சனிப்பிரதோஷம் வரும் - என்ன விஷேசம் தெரியுமா

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். அன்று செய்யப்படும் எந்த தா

Google Oneindia Tamil News

மதுரை: அட்சரப் பிரதோஷம் என்பது வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். நான் என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர் என்கிறது புராண கதை. 2020ஆம் ஆண்டில் 5 சனிப்பிரதோஷம் வருகிறது. இது அட்சரப்பிரதோஷம் எனப்படுகிறது.

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

2020 Pradosham Days in Hindu calendar

சனிப்பிரதோஷ நாளில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நாளில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.

கல்யாண வயதுதான் வந்திருச்சுடி என்று சொல்லியும் பொண்ணு திரும்பி பார்க்கலயா? - பரிகாரங்கள்கல்யாண வயதுதான் வந்திருச்சுடி என்று சொல்லியும் பொண்ணு திரும்பி பார்க்கலயா? - பரிகாரங்கள்

நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும். பிரதோஷ நாளில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.

2020 Pradosham Days in Hindu calendar

மற்ற பிரதோஷ நாளில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல். பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.

சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். சனிப் பிரதோஷ நாளில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். இந்நாளில் வசதி உள்ளவர்களும், அடியார்களும் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, சட்ஜ பிரபா பிரதோஷம். தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தாராம். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

2020 Pradosham Days in Hindu calendar

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷங்கள் வந்தால் அதனை அஷ்டதிக் பிரதோஷம் என்கிறார்கள். இந்த எட்டு மகா பிரதோஷங்களையும் முறையாக கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நமக்கு நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷங்களில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

2020 ஆம் ஆண்டில் எந்த நாளில் என்ன பிரதோஷம் வருகிறது என்று பார்க்கலாம். 2020ஆம் ஆண்டில் பிரதோஷ கால அட்டவணை.

08.01.2020 புதன்கிழமை
22.01.2020 புதன்கிழமை
06.02.2020 வியாழக்கிழமை
21.02.2020 வெள்ளிக்கிழமை
07.03.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
21.03.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
05.04.2020 ஞாயிற்றுக்கிழமை
20.04.2020 திங்கட்கிழமை
(சோமவார பிரதோஷம்)
05.05.2020 செவ்வாய்க்கிழமை
20.05.2020 புதன்கிழமை
03.06.2020 புதன்கிழமை
18.06.2020 வியாழக்கிழமை
02.07.2020 வியாழக்கிழமை
18.07.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
02.08.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
16.08.2020 ஞாயிற்றுக்கிழமை
30.08.2020 ஞாயிற்றுக்கிழமை
15.09.2020 செவ்வாய்க்கிழமை
29.09.2020 செவ்வாய்க்கிழமை
14.10.2020 புதன்கிழமை
28.10.2020 புதன்கிழமை
12.11.2020 வியாழக்கிழமை
27.11.2020 வெள்ளிக்கிழமை
12.12.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
27.12.2020 ஞாயிற்றுக்கிழமை

English summary
List of Pradosh dates or Pradosham Vrat Dates in the year 2020 in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X