For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆடி அமாவாசை: ஆயிரம் கிலோ மிளகாய் வற்றலால் பிரத்யங்கிராதேவிக்கு நிகும்பலா யாகம்

ஆடி அமாவாசை தினமான நாளை மிளகாய் வற்றல் யாகம் எனும் நிகும்பல யாகம் ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி பீடத்தில் நாளை நடைபெறுகிறது. பிரதி அமாவாசையன்று நடக்கும்.

Google Oneindia Tamil News

வேலூர்: உலக நலன் கருதி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை புதன்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஆடி அமாவாசையை முன்னிட்டு 1000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற உள்ளது.

ஸ்ரீ பிரத்தியங்கிரா சரபேசுவரருடைய நெற்றிக் கண்ணிலிருந்தும் தோன்றியவள். நரசிம்மம் என்ற கண்ட பேருண்டத்தை அடக்கவே அவதரித்தாள். அவள் ஆயிரம் முகங்கள் இரண்டாயிரம் கைகள் சிவப்பேறிய மூன்று கண்கள் கரியநிறம் மிகப்பருத்த சரீரம் பெருங் கழுத்து நீலநிற ஆடையுடன் அருள்பவள் உக்ர பிரதியங்கிரா தேவி. தேவி சாந்தம் அடைய சரபரும் தேவர்களும் ரிஷிகளும் எல்லோருமே துதித்தனர்.

அவள் விஸ்வரூபம் அடங்கி மகா பிரத்தியங்கிரா தேவியாக காட்சி தந்தாள். சரபேஸ்வரருடைய நெற்றிக் கண்ணிலிருந்தும் தோன்றியவள் ஸ்ரீ அதர்வண பத்திரகாளி மகா பிரத்யங்கிரா தேவி. சந்திர கலை சிரத்தில் பிரகாசிக்க சூலம் பாசம் டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திவாறு பக்தர்களுக்கு அருள் புரிபவள்.

 அக்னியில் தோன்றிய அம்பிகை

அக்னியில் தோன்றிய அம்பிகை

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 2014 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் யாகசலை அமைத்து 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மாபெரும் நிகும்பல யாகத்தை 10 நாட்கள் செய்தார். அந்த யாகத்தின் 3வது நாளில் அக்னியில் ப்ரத்யங்கிரா தேவியின் ஸ்வரூபம் தரிசனம் தந்து, " எனக்கு இங்கே ஒரு மாபெரும் பீடம் அமைத்து, ஆலயம் அமைக்க வேண்டும். அதர்க்கு யக்ஞ ஸ்வரூபினி ஐஸ்வர்ய பிரத்தியங்கிரா தேவி பீடம் என்று பெயர் அமைத்து மாதம் தோறும் நிகும்பலா யாகம் செய்ய வேண்டும். என்னை வந்து தரிசிப்பவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து ஆரோக்யத்துடன் ஐஸ்வர்யத்தை வழங்குவேன் என்று கூறி மறைந்தாள்.

 மகா பிரத்தியங்கிரா தேவி

மகா பிரத்தியங்கிரா தேவி

தேவியின் உத்தரவை ஏற்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மஹா பீடத்தை அமைத்து, 9 அடி உயரத்தில் விக்கிரகம் செய்து தமிழகம், ஆந்திரம், கர்னாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் கரிக்கோலமாக பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து 2015 மாசி மகத்தில் பிரம்மாண்டமான முறையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தேவியானவள் 9 அடி உயரத்தில், ஐஸ்வர்ய கலசத்துடன், 10 தலை நாகத்துடன், 4 திருக்கரங்களில் நான்கு விதமான ஆயுதங்களுடன் சிம்மத்தின் மேல் அமர்ந்து திருக்காட்சி தருகிறாள்.

 இழந்த பதவி கிடைக்கும்

இழந்த பதவி கிடைக்கும்

இத்தேவியை பதவி இழந்தவர்கள் மீண்டும் பதவியை பெறுவதற்கு இப்பீடத்தில் வந்து யாகங்கள் செய்து மனதார பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும் ராஜ யோகம் கிடைக்க வேண்டியும் யாகங்கள் செய்து செல்கின்றனர். சத்ரு பயம், கடன் தொல்லை, பில்லி, சூன்யம், திருஷ்டி, ஏவல், ருணம், ரோகம், வியாதி, கஷ்டங்கள், செய்வினை கோளாறுகள் நீங்கவும் உத்தியோக உயர்வு, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டியும் இங்கு பக்தர்கள் வந்து வழிபட்டு பலன் அடைகிறார்கள்.

ஆயிரம் கிலோ மிளகாய் வற்றல்

ஆயிரம் கிலோ மிளகாய் வற்றல்

ஜாதகத்தில் 3 ஆம் இடம், 6 ஆம் இடம், 8 ஆம் இடம் உள்ள கிரகங்களினால் ஏற்படும் தோஷங்களுக்கு நேர்த்தி கடனாக இந்திரஜித் செய்த நிகும்பல யாகம் இங்கு நடைபெறுவது தனி சிறப்பு. பஞ்சபாண்டவர்கள் மீண்டும் தங்களுக்கு ராஜ யோகம் கிடைக்க வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டதாகவும் வரலாறுகள் உண்டு.

மிளகாய் நெடி தாக்காது

மிளகாய் நெடி தாக்காது

மிளகாய் வற்றல் யாகம் எனும் நிகும்பல யாகம் ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி பீடத்தில் பிரதி அமாவாசையன்று நடக்கும் நிகும்பல யாகம் மிகவும் புகழ்வாய்ந்தது. மிளகு மற்றும் மிளகாய் வற்றலை கொண்டு யாகம் நடைபெறுகிறது. சாதாரணமாக ஒரு மிளகாய் வற்றலை தீயில் போட்டாலே நெடியின் வீரியம் தாங்க முடியாத அளவில் இருக்கும். ஆனால் இங்கு ஏராளமான அளவில் மிளகாய் வற்றலை கொட்டியும் சிறு கமறலோ நெடியோ வருவதில்லை என்பது ஆச்சர்யமான உண்மை. இதை பார்ப்பதற்கு ஒவ்வொரு யாகத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

ராஜயோகம் பெறலாம்

ராஜயோகம் பெறலாம்

ஒவ்வொரு மாத அமாவாசை தினங்கள் தவிர ஆடி அமாவாசை, தை அமாவாசை, தேய்பிறை அஷ்டமி நாட்களில் 11.30 மணி முதல் பகல் 2 மணி வரை யாகம் நடைபெறும் யாகத்திற்கு ஸ்வாமிகளின் அனுமதி மற்றும் ஆசிகளுடன் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக கருதப்படும். இத்தேவிற்கு நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெறும் ப்ரத்யங்கிரா யாகத்தில் கலந்து கொண்டு வழிபட்டு எல்லாவிதமான அஷ்ட துஷ்ட சக்திகளும் நீங்கி ராஜயோகம் பெறலாம் என்கிறார் டாக்டர் ஸ்ரீமுரளீதரஸ்வாமிகள்.

எங்கு எப்படி செல்வது

எங்கு எப்படி செல்வது

இந்த யாகத்திற்கு மிளகாய் வற்றல், இனிப்பு வகைகள், நவதான்னியங்கள், சௌபாக்ய பொருட்கள், புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், வேப்ப எண்ணேய், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் பங்கேற்கலாம். திருப்பதியில் இருந்து தெற்கில் சோளிங்கர் - வாலாஜாபேட்டை செல்லும் சாலையில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ளது. வேலூர் பேருந்து நிலயத்தில் இருந்து கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திலும் ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி ஆலயம், ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளது. தொடர்புக்கு தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

English summary
The Nikumbala yagam would take place in view of Aadi Amavasya. Participation in the yaagam would rid one of confusion in the mind, obstacles in the path of business, debt problem.In the yaagam, over 1000 kgs of chillies and spices, honey, ghee besides fruits and flowers would be offered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X