For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி அமாவாசையில் ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி மஹாயாகம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆடி அமாவாசை தினத்தில் ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி மஹாயாகம் நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும், சகல கார்ய சித்தி பெறவும், 11.08.2018 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், ஆடி அமாவாசையில் ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி மஹாயாகம் நடைபெற உள்ளது.

தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்த அன்னையானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள்.

Aadi Amavasai yagam at Sri Dhavantri arokya peedam

இத்தேவியின் அருள் பெற 33 விதமான திரவியங்களை கொண்டு 33 விதமான கார்யங்களில் சித்தி பெற ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி யாகம் 11.08.2018 ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் பயன்பெற தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.

பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும்.தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். மேற்கண்ட மஹா யாகம் சகல கார்ய சித்தி பெறவும், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் நடைபெறுகிறது. இந்த மஹா யாகத்தில் பங்கேற்பதின் மூலம் சாபங்கள், பித்ரு தோஷங்கள், சாபங்கள், வழக்குகள், திருமணத் தடை, உத்தியோக தடை, ராகு தோஷங்கள், நவகிரக தோஷங்கள், மேலும் பல்வேறு தோஷங்கள் நீங்கி செல்வம், குழந்தை பாக்யம், சுகாதாரம், இன்பம் ஆகியவை கிடைக்கும்.

Aadi Amavasai yagam at Sri Dhavantri arokya peedam

ஹோமத்தில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரணமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தை பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில்கொடி தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல கார்யங்களுக்கும் பயன்படுகிறது. ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து, பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரம் ஜபித்து நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

ஆடி அமாவாசை தினத்தில் நடைபெறும் ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி யாகத்தில் பங்கேற்க விரும்பவர்கள் மஞ்சள், குங்குமம், விசேஷ திரவியங்கள், பூசணிக்காய், சௌபாக்ய பொருட்கள், எலுமிச்சம் பழம், மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுக்கலாம். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

English summary
Aadi Amavasai sri atharvana batrakaliyammn and prithiyangira devi yagam at danvantri arokya peedam at Walajapet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X